திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை

(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள்.   அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்       ஊதியமும், சூழ்ந்து செயல்.          ஆவது, அழிவது, பின்விளைவது        போன்றவற்றை ஆய்ந்து செய்க.   தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு),      அரும்பொருள் யா(து)ஒன்றும், இல்.        செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து      செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை.   ஆக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை

(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை      இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு.   சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,       சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்       பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;         சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.   நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),      இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.      நிலஇயல்பால், நீரும் திரியும்;        இனஇயல்பால், அறிவும் திரியும்.   மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…

பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ

தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்

(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால்  05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு  பெரியாரைத் துணையாகக் கொள்ளல்.   அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை,      திறன்அறிந்து, தேர்ந்து கொளல்.        அறம்அறிந்த, மூத்த அறிவாளர்        பெருநட்பைத் தேர்ந்து கொள்க.   உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும்,      பெற்றியார்ப் பேணிக் கொளல்.        வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க்        காக்கும் பெரியாரைத் துணைக்கொள்.   அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்      …

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி)   7 11.] நம்பி அகப்பொருள் விளக்கம் 11.1 முகப்பிலோ, மூலப் பாடலிலோ, மூலமும் உரையும் இணைந்த பகுதியிலோ தேடுதல் பொறி இல்லை. 11.2.உரைப்பகுதி முகப்புப் பக்கத்தில் மட்டும் தேடுதல் குறிக்கப்பெற்று, அதனைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன(படவுரு 38) 11.3. ஒருவரின் (திரு கா.இர. கோவிந்தராச முதலியார்) உரைதான் உள்ளது. எனினும் வழக்கம்போல் உரைப் பகுதியைத் தேர்வு செய்தால் மட்டுமே உரை காண இயலும் (படவுரு…

தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே ! எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அலஃகம்து லில்லாஃக் …. சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே ! நல்ல நெறி…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்

(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044.  குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,  வராதபடி கடிந்து விலக்குதல்   செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்      பெருக்கம், பெருமித நீர்த்து.        செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,        இல்லார் முன்னேற்றம் பெருமையது.   இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா      உவகையும், ஏதம் இறைக்கு.        கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,        ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.   தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 4: இலக்குவனார் திருவள்ளுவன்

  (அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி)     4   ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்னும் தொடர் மக்கள் இடையே உலவினாலும் அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. உண்மையில் இவ்வரிகள் வால்மீகியால் இராமாயணத்தில் சொல்லப்பட்டதாகும். இராவணனின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் பின்வாங்கி ஓடும் வானரப் படையினர், தமக்குரியதல்லாத அயல்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் அயலவர் நாட்டுப் போரில் மாள வேண்டும் என்று நொந்து கூறியதாகும். இதனை, யார் ஆண்டால்…

இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்

பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு  இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.  தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச அறியேன்நான் அல்லும் பகலும் கண்டவற்றை-என்…

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக              ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது – நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு      திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது.      இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப்…