வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.      அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.      நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]                மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் – சி.இலக்குவனார்

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் தமிழில் வழங்கிய பேர் எண், கோடிக்கு மேற்பட்டது. தமிழர்கட்கு நூற்றுக்குமேல் எண்ணத் தெரியாது என்றும் ‘ஆயிரம்’ என்ற சொல் கூட ‘சகசிரம்’ என்ற ஆரிய மொழியின் திரிபு என்றும் தமிழர் நிலையைத் தக்கவாறு அறியும் வாய்ப்பில்லாத ஒரு மேலைநாட்டார் கூறிச் சென்றார். ‘ஆயிரம்’ என்பது தமிழே. அதற்கு மேல் நூறாயிரம், கோடி என்றும் எண்ணினர். ‘கோடி’ என்றால் கடைசி என்றும் பொருள் உண்டு. எண்ணுமுறையில் அதுதான் இறுதியானது என்பதை உணர்த்தும் முறையில் கோடி என்று பெயரிட்டுள்ளனர். அதற்குமேல் வரும்…

மக்கள் கவிஞர் அறக்கட்டளை – முனைவர் நாராயணன் கண்ணன் வரவேற்பு

ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30  உமாபதி அரங்கம், சென்னை மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும்  – அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா. பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்…. – ஆதிரா முல்லை  

இனப்படுகொலைக்கு நீதி நம் கையில்! கைவிட்டு விடாதீர்கள்! – இ.பு.ஞானப்பிரகாசன்

இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பது இப்பொழுது நம் கையில்! தமிழர்களே! கைவிட்டு விடாதீர்கள்!    நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே! உங்கள் அனைவருக்கும் நேச வணக்கம்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து நம் யாருக்கும் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தின் அத்தனைக் கோடி கண்களுக்கும் முன்னதாகத்தான் அந்தத் தாள முடியாத கொடுமை அரங்கேறியது. ஆனால், அதை இனப்படுகொலையாக இல்லாவிட்டாலும், குறைந்தது போர்க் குற்றமாக ஏற்கக் கூட இன்று வரை எந்த நாடும் முன்வரவில்லை. சரி, என்னதான் நடந்தது என…

தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார் தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார். – திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு…

சாதி வெறி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் – சுப.வீ.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம் சுப.வீரபாண்டியன் அறிக்கை   அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராசு, விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.   இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து,…

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்    இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது.   மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே…