ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…

இலக்கு – காவிரிமைந்தன்

இலக்கு   இதயத்தின் மையப்புள்ளி எதைநோக்கிப் பார்க்கிறதோ அதுதான் இலக்கு! முறையான செயல்செய்யும் அறிவான பெருமக்கள் தேர்ந்தெடுப்பது இலக்கு! நடைபோடும் வாழ்க்கையிலே நாம்விரும்பும் பயணங்கள் அமைப்பதற்கு இலக்கு.. வெற்றிக்கும் தோல்விக்கும் விடைசொல்லிப் பார்த்தாலே மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு! திட்டங்கள் இடுவோரின் திண்மையாவும் தீர்க்கமாய்த் தெரிவதிந்த இலக்கு! தட்டுத்தடுமாறிக் கால்பதித்து நடக்கத் தொடங்கிய நாள்முதலாய் குட்டிக்குட்டியாய் இலக்குகள்! நமக்குள் நாமே கூர்மைகொள்ள அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்! சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச் செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்! வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர் வசப்படுத்துவது இலக்கு! வாகைசூடிட நினைப்போரெல்லாம் வாரியணைப்பது…

கலைச்சொல் தெளிவோம்! 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      உணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…

கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.);  fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று   அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர்.   சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…

கலைச்சொல் தெளிவோம்! 1.] கொழுப்பு வகைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

    கொழுப்பு(2), நிணம்(24) சொற்களுடன் இறைச்சிக்கொழுப்பைக் குறிக்கும் பிறதொடர்களும் சங்கஇலக்கியங்களில் உள்ளன. இப்பொழுது பின்வருமாறு கொழுப்பின் வகைகள் குறிக்கப்படுகின்றன. கொழுப்பு – lipid   (வேளா., பயி., சூழி.,மீனி.,மனை.,கால். ) ; fat  (வேளா., மனை.,மரு.); adipose ( பயி.,);  cholesterol  ( மரு.); கொழுப்புஅமிலங்கள்–triglycerides (மனை.); உயர்மாவுச்சத்து – triglycerides ( மரு.). இப்பொழுதுநாம்அமிலம்என்றுசொல்வதைச்சங்கஇலக்கியங்கள்காடி(6) என்றேகுறிப்பிடுகின்றன. ஆதலின் சங்கச் சொற்கள் அடிப்படையில் கொழுப்பு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். நிணம் – cholesterol கொழுப்பு – fat கொழுமை – adipose கொழுமைமெய்ம்மி – adipose tissue கொழுமியம் – lipid…

கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

கடைநிலை மாறுமா ?   மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் ,  மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே   மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…

‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன       வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ இதழின் முகவரிக்கோ அனுப்பலாம். பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர் திருநாளாகிய…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…

தமிழரின் கடல் வாணிகம் – செங்கைப்பொதுவன்

நாவாய் = பெருங்கப்பல் கலம் = சிறுகப்பல் சேர வேந்தன் வானவன் மேலைக் கடலில் நாவாய் ஓட்டிப் பொன்னுடன் மீண்டான் அந்தக் கடல் வாணிகத்தின்போது பிற கலம் கடலில் செல்லாது பாதுகாக்கும் படையுடன் சென்றான்   மலையமான் பெண்ணையாறு பாயும் நாட்டுக்கு உரிய தலைவன். முள்ளூர் நாட்டைத் தனதாக்கிக் கொண்டவன். பகைநாட்டை வென்று அவரது பட்டத்து யானையின் ஓடையில் இருக்கும் பொன்னைக் கொண்டு வாடாத் தாமரை செய்து பாணர்க்கு விருதாகச் சூட்டி மகிழ்ந்தவன். பெண்புலவர் பாடுகிறார். வறுமை நிலையில் வந்துள்ள நான் வல்லமை அல்லாதவள்…

திருக்குறள் நாள்காட்டி வெளியீட்டு விழா – ஒளிப்படங்கள்

திருக்குறள் தென்றல் ஓமன் தங்கமணியின் திருக்குறள் நாள்காட்டி வெளியிடல், விருதுகள் வழங்கல் விழாவின் ஒளிப்படங்கள். பெரிதாகக் காணச் சொடுக்கவும்.

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) செ.வை. சண்முகம்

(கார்த்திகை 21 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி)   மையக்கருத்துரை   5. கூடுதல் பொருள்          கருப்பொருள்,   உள்ளுறை, இறைச்சி என்ற இரண்டு நிலையில் கூடுதல் பொருள் உணர்த்துவதாகத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார்.   இலக்கியத்தில் இறைச்சியில்   முதலும் கூடுதல் பொருள் உணர்த்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது (சண்முகம், 2009: 13, 2012: 300). 5. 1. உள்ளுறை    கவிதையியல் நோக்கில் உவமையை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என வகுக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை 46 ) ‘தள்ளாதாகும் திணைஉணர்   வகையே’  என்று…