சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை   நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது!    பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…

செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும்    சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…

செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி

(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) 10.    மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதென பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச்…

நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்

நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள்,   பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….

இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்!

  இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….

கனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு!

    கடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…

துபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு

துபாயில் பள்ளி மாணவர்கள்   தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்ச்சி   துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார்.     இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில்…

இணையவழியில் சித்த மருத்துவப் பயிலரங்கம்

நண்பர்களே, வணக்கம்.   ஞாயிறு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை (EST) (இந்திய நேரம் இரவு 7:30) நம் தமிழர்களின் பரம்பரை மருத்துவ முறையான சித்தமருத்துவம் குறித்து “ஆரோக்கிய வாழ்விற்கு சித்தமருத்துவம்” என்னும் கருத்தரங்கம்-கலந்துரையாடல் இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதை, சித்த மருத்துவர்   முனைவர் செல்வசண்முகம், அவர்கள் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் இருந்து வழங்குகிறார்கள்.   இவர் அண்மையில் நடைபெற்ற “அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை”-யின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வந்து பேரவை விழாவில் தமிழர்களுக்கு மூன்று மணி நேரம் “சித்த…

பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014

  பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!