கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!
கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !! பேரன்புடையீர் வணக்கம். எதிர்வரும் ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்….
தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை
இராசல் கைமா மருத்துவமனையில் தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப் மருத்துவமனையில் தமிழக இளைஞர் இராசு ஞானமுத்து(அகவை 41) சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து. திடீரென இவருக்கு வாதம்போல்…
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’! தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேசியத் தமிழ் மொழி நாள் விழா…
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி! ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன. முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக்…
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார் ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்)
வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07
(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 தொடர்ச்சி) வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது…
அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா
ஆடிப் பூரத் திருவிழா ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர் பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
தொறன்றோ தமிழ்ச்சங்கத்தின் செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை : கலந்துரையாடல்
தொறன்றோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் “செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை – பல்கோணப் பார்வைகள்” சிறப்புபேச்சாளர்கள் உரை: “செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்”- கவிநாயகர் வி.கந்தவனம் “என் பார்வையில் செங்கை ஆழியான்” – திரு.வ.ந.கிரிதரன் “ஈழத்தின் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: ஆவணி 11, 2047 / 27-08-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: தொறன்றோ தமிழ்ச்சங்க மண்டபம் [3A, 5637, Finch avenue East,…
முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது. இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது. காலம்: ஞாயிறு, ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 நேரம் : காலை 8.00 – மாலை 6.00 இடம்: பிர்ச்சுமவுண்டு அரங்கம் [Birchmount Stadium,…
அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு. ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை…
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி…
தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன!
தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன : – முன்னாள் போராளி சான்றுரை இனப்படுகொலைப் போரின் பின்னரான மறுவாழ்வின்போது தமக்கு வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும்…
