வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், 200-ஏ(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன், என்6 5பிஏ. [200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA]. அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி. அன்புடையீர், வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில்…

கனடியத் தமிழ்மகளிர் மாமன்றம் – நூல் வெளியீட்டு விழா, சென்னை

  ‘மடுவின் மனத்தில் இமயம்’  நூல் வெளியீடு நூலாசிரியை : சரசுவதி அரிகிருட்டிணன் சித்திரை 10, 2047 / ஏப்பி்ரல் 23, 2016 மாலை 5.00

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…

பாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம்

பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்! தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப் பாரீர்! பாரீர்! பாரீர்! பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்! வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும் தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்! வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும் தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்! உயிரினும் மேலான அறத்தை நாளும் வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும் தரணி புகழ் கொண்ட தமிழன் விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும் விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்! பாரெங்கும் பாரீர் பாரீர்! எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் ஈயும் கொடையுள்ளம்…

யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ

  கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய “யாழிசை” என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது. இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த யாழிசை கடல் கடந்தும் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களைத் தொட வெளிவந்துள்ளது. சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை…

தொல்காப்பியத்தில் தமிழிசை – முனைவர் இராச.கலைவாணி

  அனைவருக்கும் வணக்கம். வரும்  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும். சொற்பொழிவு:- “தொல்காப்பியத்தில் தமிழிசை”. வழங்குபவர்: முனைவர் இராச.கலைவாணி சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Date:  Chithirai 11, 2047 April 24, Sunday at 8:30 pm ET நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை…

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி  ஏற்றது.   ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக  உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:  சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)  கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6   நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…

புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி

40ஆம் ஆண்டு நிறைவு- புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி   வவுனியா கோவில்குளம்  இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் 40 ஆம்  ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரைப் புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14  ஆம்நாள்களில் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது.   இந் நிகழ்வு தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட…

மீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம்

மீள்எழுச்சி பெற்றது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம்   இலங்கை சிங்களப் படையிடம் / அரசிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய மேலாண்மைக் குழுத் தேர்தல்கள் நடைபெற்று மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளது.   வவுனியா நகர அவை உள்ளக மண்டபத்தில் பங்குனி 27, 2047 / 06.04.2016 அன்று காலை 11:00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக் கலந்துரையாடல் நடைபெற்றது.   வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின்…

திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி

சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி  – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து,  தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு  : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52