செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016

  செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா   வரும் மாசி 29, 2047 /  மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:

நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

முழுமையாக முடங்கியது வட மாகாணம்

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்   வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.  பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…

இலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐவரின் உடல்நிலை கவலைக்கிடம்

  இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.   கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

படை நீக்கமே நல்லிணக்கம் – ஒப்புக்கொண்ட சிங்கள அமைச்சர்

படைகளைத் திரும்பப் பெறுவது நல்லிணக்கத்துக்கு இன்றியமையாதது – ஒப்புக் கொண்டார் இலங்கை வெளியுறவு அமைச்சர்   படைகளைத் திரும்பப் பெறுவது என்பது நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.   இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்னும் தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் குவிக்கப்பட்டிருந்தது பன்னாட்டு அளவில் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாகி வந்தது.   இந்நிலையில், வாசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த இலங்கை…

த.நந்திவர்மனின் எழில்பூக்கள்: நூல், குறுந்தகடு வெளியீடு

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.30 சென்னை 6 ஔவை நடராசன் திருப்பூர் கிருட்டிணன் இசையமைப்பாளர் உதயன் காந்தளகம்

தன்னேரிலாத தமிழ் – க.தில்லைக்குமரன்

தன்னேரிலாத தமிழ் “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”                   – தண்டியலங்காரவுரை மேற்கோள்   4000 ஆண்டுகளுக்கு முன் நாவலந் தேயமாகிய ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற தமிழ்க்குடும்பமொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்…