கலைச்சொல் தெளிவோம் ! 208. படப்பொறி – Camera : இலக்குவனார் திருவள்ளுவன்

  Film winder Light into eye Viewfinder eyepiece lens Film re-winder Film Film spool Pentaprism (five-sided prism) Light-proof casing Swinging mirror Light from scene Lenses move to and fro to focus scene Aperture (diaphragm controls amount of light entering camera) – – இலக்குவனார் திருவள்ளுவன்  

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    தந்தையர்நாள் எண்ண ஓட்டம்   உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.”   (திருவள்ளுவர், திருக்குறள் 70) என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.  “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” (ஔவையார், கொன்றைவேந்தன், 37,…

எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்

  கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.   விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   அப்பொழுது…

திராவிடத்தை வென்றிடுவோம்! தமிழியத்தை ஊன்றிடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.(தமிழே முதன் மொழி. பக்.389) எனக்…

கலைச்சொல் தெளிவோம் 206. அந்தர ஊர்தி – Hovercraft: இலக்குவனார் திருவள்ளுவன்

  Propellers push the hovercrafat forward Passenger cabin Air intaker Fan (blows air downward) Air escaper (through gaps in skirt) Area of high air pressure under craft Air makes skirt balloon out and down Flexible rubber skirt Radar

நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!  …

தமிழை விலக்கும் தனிப்பிரிவு

தமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு    தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.   பொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு…

இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!    இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…

இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்   இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை:     உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…