கலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate

  16: விந்துச்சுரப்பி – Prostate [பிராசுடேட்(prostate) என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் என்ன என்று திரு நாகராசன் திருமலை(ப்பிள்ளை) கேட்ட வினாவிற்கான விடையிது.]   பிராசுடேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்குக் கீழே ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே இச்சுரப்பி உள்ளது. நெல்லிக்காய் அளவு உள்ள இதன் எடை 7 முதல் 16கல்(கிராம்) ஆகும். இதன் வேலை ஆண் உயிரணுக்களைக் கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களைச் சுரப்பதாகும். ஒருசார் ஆண்களுக்கு 50 அகவை கடந்த நிலையில் விந்துச்சுரப்பி விரிவடைகின்றது. இதனால் சிறுநீர் வரும்…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன்பகுதி 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி)   மனத்திலமர்ந்த மாங்கனி நாட்டிய நங்கை மாங்கனியைச் சேரன் அவையில் நுழைவதைக் கூறி அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது அனைவர் சிந்தையிலும் அவளே நிறைந்துள்ளாள் என்பதை, மின்வெட்டுக் கண்கட்ட மேவி னாற்போல் மென்பட்டுப் பூங்குழலி பூமி தொட்டுப் பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்; புத்தியெல்லாம் அவளானார் அவையி ருந்தோர்! (மாங்கனி : 2. சேரன் அவையில் .. 4: 1-4) என விளக்குகிறார். பெண்கள் தங்கள் பார்வையால் ஆண்களைத் தாக்கி வீழ்த்துவதால் அவர்களின் கூரிய விழிகளை வேல்விழி…

கலைச்சொல் தெளிவோம் 14 : நாளம்-vascular

 நாளம்-vascular   வாசுகுலர்(vascular) என்பதற்கு வேளாணியலில் இரத்தக்குழல்சார், சாற்றுக்குழல்சார், எனவும் புவியியலில் சாறுசெல், நாளஞ்சார் எனவும் கால்நடைஅறிவியலில் இரத்தநாள(ம்) எனவும் பயன்படுத்துகின்றனர். சிலர் குழல் என்கின்றனர். உட்துளை உள்ள பொருள்களைக் குழல்(44), குழாய்(6), தண்டு(14), புழல்(14) எனச் சங்கக்காலத்தில் குறித்துள்ளனர். முதல் மூன்று சொற்களும் டியூப்பு(tube), பைப்பு(pipe), சாப்ட்டு(shaft) முதலான பொருள்களில் கையாளப்படுவதாலும் புழல் என்னும்சொல்லை, உட்துளைப் பொருள்களைவிட உள்ளீடான பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதாலும் வேறு சொல்லால் குறிக்க வேண்டும். நாளம் என்பது சங்கஇலக்கியங்களில் கையாளப்படாவிட்டாலும் இரத்தநாளம் என நாளம் குருதிக்குழாயைமட்டுமே…

கலைச்சொல் தெளிவோம் 13 : கற்றை–fascicular

கற்றை–fascicular ஃபசிக்யூலசு(fasciculus) என்பதற்கு மனையியலில் தசைக்கட்டு என்று பயன்படுத்துகின்றனர். பண்டில்(bundle) என்பதைக் கட்டு என்பதால் அதே பொருளை உடைய கற்றை என்பதைப் பயன்படுத்தலாம். சங்கப்பாடல்களில் 3 இடங்களில் கற்றை இடம் பெற்றுள்ளது. தொகுப்பாகத் திரண்டுள்ளதைக் கற்றை என்பதே சரி.   கற்றை–fascicular எனவே, வளரியக்கற்றை/ கற்றைவளரியம்- fascicular cambium கற்றையிடை வளரியம்- inferfascicular cambium – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம் 12 மரவியம் – xylem

 மரவியம் – xylem   சைலம்(xylem) என்பதற்கு வேளாணியலில் சாற்றுத்திசு என்றும் பயிரியலில் நீர் கடத்துத்திசு/சாற்றுக்குழாய் என்றும் கானியலில் சாற்றுக்குழல் என்றும் குறித்துள்ளனர். சிலர் குழல்திசு என்கின்றனர். பேராசிரியர் அ.கி.மூர்த்தி மரவியம் என்னும் சொல்லை அறிவியல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். மரம்(105) என்னும் சங்கச்சொல்லின் அடிப்படையிலான இச்சொல்லையே ஏற்ற சொல்லாகப் பயன்படுத்தலாம்.  ஆகவே நாள மெய்ம்மியை(xylem) மரவியம் என்றும் பட்டை மெய்ம்மியை(pholem) பட்டையம் என்றும் சுருக்கமாகக் கூறலாம். மரவியம் – xylem பட்டையம்  – pholem உள்நோக்குமரவியம்-endarch xylem வெளிநோக்கு மரவியம்-exarch xylem துணை (அல்லது…

கலைச்சொல் தெளிவோம் 10 : அதிரி-vibrio

அதிரி-vibrio     அதிர்(14), அதிர்க்கும்(3), அதிர்ந்து(8), அதிர்ப்ப(1), அதிரப்பு (1), அதிர்பட்டு(1), அதிர்பவை(1), அதிர்பு(9), அதிர்வது (1), அதர்வன(1), அதிர்வு(2),அதிர(20), அதிரல்(17), அதிரும்(4) முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம்.   அதிரி-vibrio வைபிரியோ(vibrio) என்பது வளைந்த வடிவமுடைய நுண்ணி(bacteria) என்பதால் வடிவ அடிப்படையில் வளைவி என்று சொல்லலாம். ஆனால், மூலச்சொல் அதன் அதிரும் தன்மையின் அடிப்படையில் குறிக்கப்பட்டிருப்பதால் வளைவி என்பது பொருத்தமில்லை எனத் தவறாக எண்ணலாம். எனவே, மூலச்சொல்லைப்போவே அதிரும் தன்மையின் அடிப்படையில் அதிரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது….

கலைச்சொல் தெளிவோம் 9 : கோளி (பூவிலி) –cryptogam

    கோளி (பூவிலி) –cryptogam   சங்கஇலக்கியங்களில் உள்ள பயிரியல் செய்திகள் போல் வேறு எந்த அறிவியல் நூல்களிலும் காணஇயலாது. வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, முதலான பல உறுப்புகளின் வடிவம் தன்மை, முதலான பலவும்  தெரிவிக்கப்பட்டு  உள்ளன. இலக்கியம் கூறும் அறிவியல் செய்திகளே மிகுதியாக உள்ளன எனில் உரிய அறிவியல் நூல்களில் மேலும் கணக்கற்ற உண்மைகள் அல்லவா இருந்திருக்கும். ஆல், அத்தி, பலா முதலான பூவாமல் காய்க்கும் மரங்ககளைப் பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சங்கநூல்கள் பூக்காத் தாவரங்களைக்…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)     அரிமா அடலேறு சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க   வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும்…

கலைச்சொல் தெளிவோம்! 8.] மலையியல் கலைச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

8.] மலையியல் கலைச் சொற்கள்     மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.   குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.   சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல்…

மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!

மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!   மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு த் தூக்குத் தண்டினை விதிக்கப்பட்டனர். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல் தூக்குத் தண்டனை நாடகமும் நிறைவேற்றிவிட்டு விடுதலை யும் செய்யும் புதிய நாடகம் அரங்கேறியுள்ளது. ஏறத்தாழ அனைவருமே இதை அறிந்திருக்கின்றனர். ஆனால் விசயகாந்த்து மட்டும் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார். தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை…

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…