சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3

(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி மூன்று துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு  இடம்: வால்மீகி முனிவரின் துறவகம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.  பெண்சீடர்கள்: மகரிசி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது….

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1)      2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி  மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.    சிக்கல் − 1   பாதிரியாரின் 16-ஆம்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 1

நாடகப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்…. [தொடக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்] முதலாம் காட்சி சீதை நாடு கடத்தப்படல்   இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை, நேரம்: பகல் வேளை. பங்கு…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார்   ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.  ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…

நல்வழியின் சொல்வழியே… சந்தர் சுப்பிரமணியன்

நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் – வெம்மைவரின் கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே தீதொழிய நன்மை செயல் செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர் அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் – இயல்பதனைத் தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம் பட்டாங்கில் உள்ள படி படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம் துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! – விடுத்ததனை அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த் துஞ்சுவதோ மாந்தர் தொழில் தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும் உழைப்பினுல கென்றும் உதவும் – குழியடிகாண் கல்லை உடைக்கின்நீர் காட்டும்…

பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்

  தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! – கவிக்கோ ஞானச்செல்வன்

அடங்கா வெறி! – தங்கர்பச்சான்

 எங்கே போகிறது மன்பதை?   பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.   செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.   நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு)   “கையேட்டின் அமைப்பு”   போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது.  கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்.  நிற்க.  பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில்…

இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

உள்ள வெள்ளம்   ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ பாட்டைக் .. கொன்றிடல் இயல்பு தானோ?…

சிறகினில் திசைகளையள!- முனைவர் அண்ணாகண்ணன்

முடிமுடிமுடி செயலே! இனிதினிதினிதினிதினிதினிதினிது எமதெமதெமதெமதெமதெமதெமது அமுதமுதமுதமுதமுதமுதமுது எமதெமதெமதெமதெமதெமதெமது சரிசரிசரியென,சரிவரும்உலகு சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது அரிதரிதரிதரிதரிதரிதரிது சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு சிறகினில்திசைகளையளப்பதுமழகு சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு கருவுறுதிருதருவரகவிமதுரம் துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம் பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம் மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம் கடகடபடபடமடமடவெனவே சடசடதடதடகிடுகிடுவெனவே உடனுடனுடனுடனுடனுடனுடனே முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே!   நன்றி – வல்லமை (http://www.vallamai.com/?p=55610)

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 2 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 2 (பின்னணி) நினைத்துப் பாருங்கள்!    உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில்,  பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை….