விட்டத்தில் இல்லை விடியல்! – – சந்தர் சுப்பிரமணியன்

    வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும் வகையே தில்லை! துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித் தொடரும் தோப்பாய்! களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம் கனவாய்ப் போகும்! தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம் தமதாய்ச் சேர்ப்பர்! (1) வில்லொன்றின் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ விலக்கும் அம்பும்! கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக் கரைக்குங் கல்லை! அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய் அமையுங் கோபம்! செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின் செயந்தான் ஆங்கே! (2) அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால் அமைந்த ஆதி! மலையேறும் போதெல்லாம்…

காதல் ஒரு விந்தை!

– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 1 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 1  முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி …   ஆம் … பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய “இலக்கணம்” அனைத்துமே “கையேடு”களே.  20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே.  இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள்…

மாயாண்டிபாரதி என்னும் வரலாறு – பாலா, தமிழக அரசியல்

  ‘‘ஏறினா இரயிலு… இறங்கினா செயிலு!’’ – மாயாண்டி பாரதி என்ற சரித்திரம் மாயாண்டி பாரதி… மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.   இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார்.   மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் மாயாண்டி. இவருக்கு 13 அகவை ஆகும்போது 1930ஆம் ஆண்டு திருமரைக்காடு என்னும் வேதாரண்யத்தில்…

வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! -குமரி அனந்தன்

வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா!   தொல்காப்பியத்தில் ஒரு பொருளைப் பெரிதாகச் சொல்வதற்குப் ‘பனையளவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளைத் தினையளவு என்றும் பெரிய பொருளைப் பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.  திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104 ஆவது, பொருட்பாலில் 433 ஆவது, இன்பத்துப்பாலில் 1282ஆவது குறள்களில் பனை என்று வருகிறது. ‘கள் உண்ணாமை’ என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில்தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில்…

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்  – இலக்குவனார் திருவள்ளுவன்     உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….

இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை  இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.    உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…