சமற்கிருதமா? மீண்டும் ஒரு சண்டமாருதம்! – நக்கீரனில் தமிழ்க்கனல்

மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி. நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி…

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்

     மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…

பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

கரை சேருமா கச்சத்தீவு? – க. இராமையா

  தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?   தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…

(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!

முதன் முதலாக  உலகத் திருக்குறள்  மாநாடு!    இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…

ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்

  சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும்   ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…

தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி

   நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16     “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…

ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா

  ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…

இடர்கள் தந்தபோதும்…,எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்

அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த…

முள்ளிவாய்க்கால்

  எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல் என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம் ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி! அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம்…

ஓ நந்திக்கடலே! – மட்டு மதியகன்

பார்வைக்காக விடப்பட்ட போர்க்கருவிகள் பாரிலிருந்து வந்த இராணுவ மேதைகள் மலைத்துப் போயினர் கொள்ளிக்கட்டைகளாக அள்ளி அடுக்கப்பட்ட வித்துடல்களைச் சுமந்த இயந்திர வண்டி கொலைகாரக்கொடியவன் இளம் பெண்ணை இழுத்து வருகிறான் நிருவாணமாக வீரமாது வித்தாகி விழுந்து கிடக்கிறாள் படிந்த குருதியோடு ஈரேழு வயதான எங்கள் பாலகன் பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம் பிஞ்சி மார்பில் பஞ்சு ரவை வேட்டுககள் ஏந்தியபடி வீரமரணம் போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும் அநியாயமான காட்சி இறந்த மங்கையின் மார்பில் நல் குலம் பெறாத நாசிக்காரன் காலை ஊன்றிய புகைப்படம் உயிருக்காய்ப் போராடும்…

கனவோ நனவோ – கிரிசாசன்

கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம்  பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…