தமிழர் நாம்! – துயிலகா

விளைந்த வயல்களில் வேர்களும் இல்லை வியர்வை சிந்தி உழைத்தவர் தடயமும் இல்லை மழைத்தூறல் பட்டால் மனம்கூட நிறைத்திடும் மண்வாசம் கொஞ்சமதைத் தோண்டினாலும் சற்றே பிணங்களின் படையெடுப்பு வீதிவழி கெந்தியாடிய சின்னஞ்சிறார் கையில்லை காலில்லை ஊனமானார் பட்டுச்சரிகையில் சொலித்த எம் ஈழத்தாய் விதைவைக்கோலம் தரித்தின்று மௌனித்தாள் காலகாலம் ஆண்டுவந்த எங்கள் பூமி போர்க்களமாய் மாறி நிலைகுலைந்ததின்று தமிழர் என்ற கோர்வைக்குள் நாமின்று தனித்தனியே செல்வதால்தான் பயனுமென்ன? ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வேங்கை ஒன்றுதிரண்டால் போதும் காரிருளும் கலைந்தோடும்! ஒருவழி தமிழ்வழி நின்றிருந்தால் போதும் ஓடி ஒழிய…

அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி

  தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614

பதுங்கு குழி

பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது பயத்தால் அல்ல.. உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க.. நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல.. எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..! நன்றி : மதுசூதனன் http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html

ஈழத்தின் கண்ணீர்தானோ !

  அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தருமம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ?   – விக்கி         http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html  

முற்காலத்தில் – சுருதி (இளையவள்)

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூனியமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து மீளவில்லை முள்ளிவாய்க்கால் முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே – ஓவியா

  விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவைச் சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களைச் சுமக்கிறது   கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

என் தேசக் காற்றே..! – நா.நிரோசு

    செந்தமிழ் பேசும் என்தேசக் காற்றே செங்கடல் தாண்டி வந்து என்தேகம் தூண்டிவிடு…! ஈழமண்ணின் ஈரம் கொண்டு இந்தப் பாலை மண்ணை பனிமலர்த் தோட்டமாய் மாற்றிவிடு…! தாயகம் தாண்டி வந்து தவிதவிக்கும் நேரம் இது தடையின்றித் தாவிவந்து – என் தலையைக் கோதிவிடு…! அம்மாவின் கைச்சோறு அன்பான சாப்பாடு அந்தநாள் நினைவுகளை அள்ளிவந்து ஊட்டிவிடு…! ஆண்டுகள் பல கடந்தாலும் அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும் என்தமிழே நீமட்டும் என்னோடு வாழ்ந்துவிடு…! http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211564

மாண்டுபோன‌ மாந்த நேயம் – நற்றமிழன்

  எனது தாயைக் கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தைப் பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌ மன்னியும் நண்பனை! சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன்! இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும், அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,, http://natramizhan.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/

உடைத்தெறி வேலிகளை! – கார் முகிலன்

நாம் புதைந்த இடத்தில் இன்னும் புழுதி அடங்கவில்லை நீங்கள் தூக்கிச் சென்ற எம்முடல் ஈரம் காயவில்லை இன்னும் கொதிக்கிறது என் குருதி எழுந்து போராட உடலுடைந்து பிணமாய்க் கிடக்கிறேன் கல்லறையில் மனம் உடையாமல் முடிந்தால் எனக்கோர் புது உடல் தாருங்கள்! ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்! என் இனிய ஈழ உறவுகளே என் கல்லறையில் – பூ வைக்கும் பெண்டுகளே உம் மானம் காக்க வருகிறேன் சிங்களவன் வாலை அடக்க எழுகிறேன் தீயில் நீராடிய என் சகோதரன் பக்கத்தில் உறங்குகிறான் பாருங்கள் கரும்புலியாய் வெடித்தவன் அவன்…

நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து…

முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை

  தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா? அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!! முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில் ஐயோ.. அம்மா.. ஆ… என்ர பிள்ளை.. என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா…….ஐயோ………. நான் என்ன செய்வேன்………………………….. என்ற அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில் அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை கொண்டன. காரணம் அங்கே ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் இனவாதக் குண்டுகளே அதனால்தான்…

காவியச் சதுக்கம் – கவிஞர் தமிழவன்

  கல்லறை தின்றதோ எங்கள் மறவரை களங்கள் தேடுதே அந்த வீரரை நிலத்தில் இடியான எங்கள் சோதரை கண்ணிவெடிகள் மறக்குமா புதைத்த மாதரை விடிவு ஒன்று தான் எம் மண்ணின் மூச்சு விடியும் வரையும் இல்லை வாய்ப்பேச்சு தமிழர் என்பதே தலைவிதி ஆச்சு என்று சங்கை ஊதியே களம் சேர்ந்தாச்சு முப்படை என்பதே உலகின் வழக்கம் நாற்படை கண்டது புலிகள் இயக்கம் பகையின் தலையில் இடிகள் முழக்கம் அது கரும்புலி என்றொரு காவியச் சதுக்கம் …….. நன்றி :  http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278