நம் எண்களை நாமறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 1, 2, 3… என்னும் முறையிலான எண்கள் தமிழில் இருந்து அரபிக்குச் சென்று பரவியதே இருப்பினும், நாம் மூலத்தமிழ் எண் வடிவங்களை அறிதல் வேண்டும். பிறமொழியினர் அவர்கள் மொழியின் எண்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தவும் அறிந்திருக்கையில் நாம் அறியாதிருப்பது அழகன்று. ஆதலின் தமிழ் எண்கள் தரப்படுகின்றன. பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.   ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘’10’ என்றே குறிக்கின்றன. ‘௰’ எனக் குறிப்போரும்…

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]                மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்    இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது.   மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே…

தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்த்தமிழும் மலையாளமும் 1   தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும்…

தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

எவராலே? ஈழம் சிதைவது எவராலே?             தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில்             தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி             மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத்             தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை             ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை             வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே?             இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறநிலையத்துறையில் தமிழறம் தழைக்கட்டும்!   எந்த நாட்டிலும் இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம்.  மலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர்,…

தமிழும் சிங்களமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    தமிழும் சிங்களமும்   “உலக மொழிகளின் தாய், தமிழே” என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், “இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே” என்கிறார். “எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை” என்கிறார் முனைவர் சுப்பிரமணிய(ஐய)ர். “தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி” என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும்…

கலைச்சொல் தெளிவோம் 211. தண்கலன்- Refrigerator : இலக்குவனார் திருவள்ளுவன்

Evaporator Coolant (absorbs heat from air inside) Air chamber Condensor Coolant (gives heat to surrounding air) Compressor pressurizes coolant Electric pump Electric wires to thermostat Refrigerator thermostat(temperature control) Flexible air chamber(changes in size as air inside warms or cools Temperature control knob Electric wires to pump and compressor – – இலக்குவனார் திருவள்ளுவன்