வெருளி நோய்கள் 126 -130 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 121 -125 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 126-130 126. அகராதி வெருளி – Lexicophobia அகராதி குறித்த வரம்பற்ற பேரச்சம் அகராதி வெருளி. அகராதிகளில் சொற்பொருள் காண்பது எப்படி என்று தெரியாமல் கவலைப்படுபவர்களும் அதனால் அகராதி மீது வெறுப்பு கொள்பவர்களும் உள்ளனர். சிலர் அகராதிகளில் சொற்பொருள் தேடுகையில் பரபரப்படைந்து வெறுப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். புத்தக வெருளி உள்ளவர்களுக்கும் அகராதி வெருளி வர வாய்ப்புள்ளது. 00 127.) அகவை 20 வெருளி – Vigintannophobia அகவை 20 குறித்த வரம்பற்ற பேரச்சம்…
128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்
(127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே. ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர். “அவிசொரிந்து ஆயிரம்…
வெருளி நோய்கள் 121 -125 : இலக்குவனார் திருவள்ளுவன்
122.) ஃபிரெடி கெரூகெர் வெருளி – Nightmare ElmStreetphobiaகற்பனைப்பாத்திரமான ஃபிரெடி கெரூகெர்(Freddy Krueger) குறித்த அளவு கடந்த பேரச்சம் ஃபிரெடி கெரூகெர் வெருளி.எல்லம் தெருவில் அமுக்கிப் பிசாசு(A Nightmare on Elm Street) என்னும் படத் தொடரில் வரும் கற்பனைப்பாத்திர கொலைகாரனே ஃபிரெடி கெரூகெர்.00 123.) ஃபெரன் வாற்றர் வெருளி – Fernwaltersphobiaபுனைவுரு ஃபெரன் வாற்றர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபெரன் வாற்றர் வெருளி.ஆர்தர் படக்கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வரும் ஒரு பாத்திரமே ஃபெரன் வாற்றர். இது மனித உருவேற்றப்பட்ட (anthropomorphic dog) நாய்;…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன. தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார். “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு…
தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை136 & 137; என்னூலரங்கம்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 136 & 137; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) ஆடி 04, 2056 ஞாயிறு 20.07.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…
127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
(126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக் கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்…
வெருளி நோய்கள் 116 -120 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 116 -120 116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00117.) 99 ஆம் எண் வெருளி –…
வெருளி நோய்கள் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 106 – 110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 111 -115 111.) 800 ஆம் எண் வெருளி – Octicentumphobia800 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 800 ஆம் எண் வெருளி.எண் 800இல் உள்ள 8 + 0 +0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 800 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00112.) 87 ஆம் எண் வெருளி – Octokontaheptaphobia/Ogdokontaheptaphobia87 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்…
126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்
(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று. பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார். திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன் எலனை…
வெருளி நோய்கள் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 106-110 106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம்…
125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(124.கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை) சனாதனம் பொய்யும் மெய்யும் 125 125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? அடுத்து நாம் பார்க்க வேண்டியது மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா என்பது குறித்து. வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான்….
சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 986. Audit notes தணிக்கைக் குறிப்புகள் தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும். 987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…
