போதை – மரு.பாலசுப்பிரமணியன்

பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும் பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும் மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும் போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை நெஞ்சினிலே துயரம் வந்ததென்று போதையில் மயங்காதே நெஞ்சினிலே துணிவு வந்த பின்னே பாதையில் தயங்காதே பாதையில் தள்ளாடும் படகுகள்…

திசை காட்டும் திருக்குறள் – பாலகிருட்டிணன் இ.ஆ.ப.

என்பார்வை: திசை காட்டும் திருக்குறள் திருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும் முத்திரைகள் தான். ஒருவகையில் 23 ஆம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்குப் பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும். படிநிலை வளர்ச்சி திருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக…

அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி

     அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.   நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…

ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6

(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு   முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்:  மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…

தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்

உறுதி   ஏற்பாய் ! அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்             அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில் உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி             உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய் முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த             முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்             விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி ! வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு             வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய் காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்             கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3)   ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.    எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் என்றி ஓஎனிகுசுவால்டு (Henry…

தமிழுக்கு அமுது தந்தவர்! – முனைவர் ம. இராசேந்திரன்

 சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்? ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார்…

நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

  இமயத் தொட்டிலில் ஆட்டமடா !  இயற்கை அன்னை சீற்றமடா !  பூமாதேவி சற்று தோள சைத்தாள் !  பொத்தென வீழும் மாளிகைகள்  பொடி ஆயின குடி வீடுகள் !  செத்து மாண்டவர் எத்தனை பேர் ?  இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?  கட்டிய இல்லம், சேமித்த செல்வம்  பெட்டி, படுக்கை, உடுப்பு,  உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !  அந்தோ !  வேனிற் கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு  தெரு மேடையில் தூங்குகிறார் !  வானமே கூரை…

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல். சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை. தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை. பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை. காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை என்றும் அழியாப் புத்தழகு உடைமை. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை. பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை. பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும்…

மொழிக்கல்வியும் மொழிக் கலப்பும் – ஏ.ஆதித்தன்

  சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவிதான் கல்வி என நம்பப்படுகிறது. மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலைவிட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது. மொழிதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திச், சமூக…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2)  சிக்கல் − 2 பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!  ஒருவருடைய கையேட்டுப் படியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே!  …