திராவிட மொழிகளின் தாய்! – வைகைச்செல்வன்

திராவிட மொழிகளின் தாய்! மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தவை மொழிகள்தாம். நாடோடித் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல்மேல் சேர்தல், உழவு செய்தல் இந்த ஐந்து படிநிலைகளில் மனித நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம், வேட்டையாடுதலின் மூலம் ஒரு வேட்டைச் சமூகத்தையே தன் இதயத்தில் தாங்கி நகர்ந்தது. அதன் முன்னர் நாடோடியாகத் திரிந்து பல்வேறு கால தட்பவெப்ப நிலைகளில் தன் உடல் தாங்க, மனம் ஏங்கப் புதியவற்றை கற்றுக் கொண்டது.  பின்பு…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி) எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி! கற்றதன் பயனாக அறிவர்வழி நட! நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட! துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்! இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்! நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்! மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்! துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்! தலையால் நற்குணத்தானை வணங்கு! அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி நில்! (தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…

தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! -இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தியாவில் மாநிலங்களுடன்  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன. இப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman…

திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் உயராய்வு அரங்கு 927 திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை: திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார் உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் நூலறிமுகம் 2/4 சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு  திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். 31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு…

மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்! மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு  இருப்பின்  அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில்…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்பாளர் குறிப்பு: எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355) மெய்ப்பொருள் காண்பதறிவு  என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6…

வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்

முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) முனைவர் வாணி அறிவாளன்             திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி…

பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா

பொங்குக புதுமை! ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம். தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற…

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! – பெரியார் ஈ.வெ.இராமசாமி

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக!  “பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன். ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை;…

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர். நமது மொழியும் இனமும்…