வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 (குறள்நெறி) நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு! அற வழியில் உண்மை இன்பம் அடை! அறம் செய்! பழிச்செயல் விடு! சார்ந்தோர்க்குத் துணையாக இரு! துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்! பிறருடன் உன்னையும் காத்திடு! பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்! இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி! இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்! முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன் (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்

ஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும். தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது…

பாவம் வைகோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

பாவம் வைகோ! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல்  ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…

செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? தமிழ் தொடர்பான துறைகள், பதவிகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்பிற்கான முதல் தகுதி தமிழறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழராக இல்லாமல் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி. இந்திய அளவிலும் மத்திய அரசு இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பெறும்  தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை. இக்குழுவில் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். எப்படியோ…

திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்

திருக்குறள் சுட்டும் தீமைகள்   முன்னுரை      உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள் 1.குற்றம் கடிதல் (44) 2.கூடா நட்பு…

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம் ஆடுவதால் மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது. பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நீதி மன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான ஆட்சிதான் அரசை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை. இவ்வாறான…

இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்!  பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை.  இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 இன் தொடர்ச்சி)    வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 (குறள்நெறி) 31. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு! 32. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே! 33. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க! 34. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு! 35. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்! 36. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்! 37. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்! 38. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று! 39. அறத்தினை அன்றன்றே ஆற்று! 40. …

பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019

வைகாசி 12-14, 2050  / 26.05.2019-28.05.2019 பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி திண்டுக்கல்   வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா இணையத் தோழி, இந்தியா பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019 அறிவிப்பு மடல் கருப்பொருள் தமிழ்மொழியின் பன்முகத்தன்மை துணைக் கருப்பொருள் தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,…

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

எனக்குப் பிடித்த திருக்குறள்!      தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால்…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற…