இசைத்துறைக் கலைச்சொற்கள் – இரா.திருமுருகன்

இசைத்துறைக் கலைச்சொற்கள் மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலிய பழந்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் மருதம், குறிஞ்சி, நைவளம், காமரம், மருவின்பாலை முதலிய பண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்தளம், சாதாரி, தேசி, குறிஞ்சி, நாதநாமக்கிரியா, கௌள, சீராகம் முதலிய பெயர்களைக் குறிப்பிடுகிறார். இவற்றில் பழைய பண்களின் பெயர்களும் இக்காலத்து இராகங்களின் பெயர்களும் கலந்து காணப்படுகின்றன. தோடி, முரளி, வராளி, பைரவி முதலிய இராகத்தின் பெயர்களைத் திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடுகிறது. மோகனம், முகாரி இராகங்களை அண்ணாமலையாரின் காவடிச் சிந்து குறிப்பிடுகிறது. முனைவர் இரா.திருமுருகன்: ஏழிசை எண்ணங்கள்:…

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!   பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!   தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…

மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர்,  தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.   பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி)   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)  ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:   தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்  பகல் வந்தால் பிணங்கி ஓடும்! நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால் 15. கற்பு இயல்    131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்   (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்       அல்லல்நோய் காண்கம் சிறிது.        அவர்படும் துயரைக் காண்போம்         சிறிது; மனமே! நீ வேறுபடு.    1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது       மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.         உணவில் உப்பின்…

மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்

மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது!    உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும்   “மக்களிடையே சமநிலைக் கொள்கையைப் பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத் தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர் கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும் அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக் கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம். இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை…

அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்

அமைதியின் காரணம்  ஆழ்மனத் துயரமோ?   சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை! கலைஞர்களைத் தன்  சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது! சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது! தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது! ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது! சமத்துவம் காண முடிந்தது! ஆரியத்துடன் இணையவும் முடிந்தது! அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது! கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.)  2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக  வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்!    பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின்  பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை  அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்!…