வெருளி நோய்கள் 1476 -1480: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1471-1475) வெருளி நோய்கள் 1476 -1480 நிலைப் பேழைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நிலைப் பேழை வெருளி.மூடிய பேழையைத் திறந்தால் பூதம் வரும் என்பது போன்ற கதைகளைப் படித்தவர்கள் அல்லது கேட்டவர்கள் அதனை உண்மை என நம்பி பேழைமீது பேரச்சம் கொள்கின்றனர்.சிறுஅகவையில் பேழையில் நுழைந்து அது மூடப்பட்டிருந்தாலோ பிறருக்கு இத்தகைய நேர்வு நடந்திருந்தாலோ பேழை மீது பேரச்சம் கொண்டு (நிலைபபேழை வெருளிக்கு ஆளாகின்றனர்.சிறுவகை பேழையும் உள்ளதால் நிலைப்பேழை எனக் குறித்துள்ளோம். சுவர்ப்பேழை மீதும் இதே போன்ற காரணமற்ற அச்சத்தால் வெருளி வரும்.அறைகலன் வெருளி…
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர். த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது…
வெருளி நோய்கள் 1471 -1475: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1466 -1470: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1471 -1475 மாற்றுணா/நிலாச்சோறு (potluck) விருந்து தொடர்பான அளவு கடந்த பேரச்சம் நிலாச்சோறு வெருளி.தனித்தனியே உணவுவகைகளைக் கொண்டுவந்து சேர்த்துப் பகிர்ந்து மற்றவர் உணவை உண்ணுதல் மாற்றுணா விருந்து எனப்படும். பெரும்பாலும் சோறு முதலான மைய உணவு பொதுவாகவும் துணை உணவுகள் பங்கு கொள்வோராலும் அளிக்கப்படுகின்றன.மொய்விருந்து என்னும் பொருள் கொண்ட potlatch என்னும் (வட அமெரிக்க நாட்டின் மரபு மக்களின்) விருந்து முறையில் இருந்து potluck வந்ததாகச் சிலர் கூறுவர். 16 ஆம் நூற்றாண்டில் தாமசு…
வெருளி நோய்கள் 1466 -1470: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1461 -1465: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1466 -1470 நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் காணாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிண்டெண்டோ காணாட்ட வெருளி.நிண்டெண்டோ நிறுவனக் காணாட்டப் பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் காணாட்ட வெருளிநிண்டெண்டோ(Nintendo) நிறுவனம் மிகுதியான காணாட்டங்களை விற்பனை செய்கிறது. இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒளிரும் விளக்குகளால் வலிப்பு நோய், மன நோய் முதலானவை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர். எனவே, நிண்டெண்டோ நிறுவனப் பொருள் மீது அளவுகடந்த பேரச்சம கொள்கின்றனர். நூற்றாண்டு பழமை கண்ட நிண்டெண்டோ நிறுவனம் முதலில் சீட்டுக்கட்டுகள் உருவாக்கத்தில்…
நாலடி நல்கும் நன்னெறி 30 . பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை.
(நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 30. பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்பிறப்பினை யாரும் முனியார்; – பிறப்பினுள்பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்நண்பாற்றி நட்கப் பெறின். நாலடியார் பாடல் 174; பொருட்பால் – நல்லினம் சேர்தல் [ இறப்ப நினையும்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள் பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்க பெறின். ] பொருளுரை:மிகவும்…
வெருளி நோய்கள் 1461 -1465: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1456 -1460: தாெடர்ச்சி) வெருளி நோய்கள் 1461 -1465 00 நிசான் வண்டிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிசான் வெருளி.பன்னாட்டு உந்து நிறுவனமான நிசான் பொறியுந்து நிறுவனம்(Nissan Motor Co., Ltd.) சுருக்கமாக நிசான் என அழைக்கப்பெறுகிறது.00 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் நூலாய்வு: 1. சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை. இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார்….
வெருளி நோய்கள் 1456 -1460: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1451 -1455: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1456 -1460 நாற்பதாம் எண் தொடர்பான அளவுகடந்த மிகுதியான பேரச்சம் நாற்பதாம் எண் வெருளி.“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழியாலும் எண் 40 மீது கவலைப்படுவோர் உள்ளனர். வெற்றி தோல்வியும் நலமின்மையும் யாவருக்கும் வரும். இருப்பினும் இராகுவின் தன்மை கொண்ட 40இற்கு நலக்குறைவும் தோல்வியும் பயனாக அமையும் என எண்ணி இந்த எண் மீது தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர்.நான்காம் எண் வெருளி உள்ளவர்களுக்கு 40 ஆம் எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.Saranta…
வெருளி நோய்கள் 1451 -1455: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1446 -1450: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1451 -1455 நாய்கள் மீதான இயல்புமீறிய பேரச்சம் நாய்வெருளி.நாய் குரைப்பு ஒலி, நாய் அருகே வருதல், நாய்க்கூட்டம், நாய் தன்னையோ பிறரையோ துரத்தல், நாய்க்கடிக்கு ஆளானவர்கள் அருகில் இருத்தல், நாய் கடித்தல் போன்ற சூழல்களில் மிகுதியான பேரச்சம் கொள்ளுவர்.Cyno, kyno ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் நாய்..00 நாய்க்குட்டிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நாய்க்குட்டி வெருளி.நாய் வெருளி – Cynophobia / Kynophobia உள்ளவர்களுக்கு நாய்க்குட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.நாய்க்குட்டியின், மேலே தாவிக்…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 5 21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்ட செய்தி குறித்து 17 ஆவது கட்டுரை தெரிவிக்கிறது. 21.02.1940 அன்று கட்டாய இந்தி நீக்கப்பட்டது. அப்போதைய மாகாண ஆளுநர் சான் எருசுகின் பிரபு இதனை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் உள்ளூர்ச் சிக்கலில் மாட்டிக்காெள்ள வேண்டா என்ற எண்ணத்தில் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ஆசிரியர். அன்றே இது குறுஞ்செய்தியாக விடுதலை இதழில் வெளிவந்ததை எடுத்துரைத்துள்ளார். அத்துடன் மறுநாள் விடுதலையில்…
வெருளி நோய்கள் 1446 -1450: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1441 -1445: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1446 -1450 நாட்டுப்புற இசை / நாட்டார் இசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாட்டார் இசை வெருளி. நாட்டுப்புற இசை என்பது மரபு வழியிலான இசையே. செவ்விசையும் இதில் அடங்கும். எனினும் அடித்தட்டு மக்கள் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், இதனை இழிவாக எண்ணுவோர் பலர் உள்ளனர். இது, போர், ஒடுக்குமுறை, அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவும் (Protest Music) பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பூர்வகுடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள், அவர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், இனப்படுகொலை, …
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி) சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும் ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார். இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு ஏ தாழ்ந்ததமிழகமே! என்று நீ சமூக நீதி பெறுவாய்? ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே! என்று நீ சமநீதி…
