அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? -இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? தமிழ், தனித்தியங்க வல்லது என்பது அதன் சொல் வளத்தால் மட்டும் அல்ல; நெடுங்கணக்காலும்தான். எனவே, பிற மொழிச் சொற்களை நீக்கித் (தனித்) தமிழ் இயக்கம்  வெற்றி காண  அயல் எழுத்து வடிவங்களையும் அறவே நீக்க வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அயல் எழுத்து வடிவம் என்று பார்க்கும் பொழுது பொதுவாக அயல் எழுத்தொலிகளைக் குறிக்கப்பயன்படும் கிரந்தம் நடைமுறையில் இருப்பதால்தான் பிற மொழிச் சொற்களை நாம் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றோம். உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தனித்தன்மையை நமக்கு உணர்த்திய அறிஞர் காலுடுவெல்; அதனை வழி மொழிந்து…

வெருளி நோய்கள் 166 -170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 161-165 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 166 -170 166. அணுக்குண்டு வெருளி – Atomosophobia அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி. போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி  நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும்  பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர். அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4  தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5 இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம். 50.      ஊழியர்களைத் தேர்வு செய்தனர். 51.      16 பேரைக் கைது செய்தனர். 52.      புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர். 53.      நடவடிக்கையைக் கைவிடு. 54.      விடுமுறையைக் குறை.    55.      புதுமுறையைப் பின்பற்று. 56.      நடைமுறையைக் கவனி. 57.      அமைப்பைச் சேர்ந்தவர்கள். 58.      கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.   59.      கும்பலைச் சேர்ந்தவர்கள். 60.      தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது. 61.      நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார். 62.      ஆகியவற்றைப் பார்வையிட்டார். 63.      போட்டியிடாததைத் தொடர்ந்து … 64.      பெயரைப் பரிந்துரைத்தால் …    65.      பயிர்களைச்…

வெருளி நோய்கள் 161 -165 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 156 -160 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 161 -165 161. அட்டோபர் வெருளி – shiyuephobia  நடைமுறை ஆண்டில் பத்தாவது மாதமான அட்டோபர் மாதம் குறித்த  வரம்பில்லாப் பேரச்சம் அட்டோபர் வெருளி. shi என்னும் சீனச்சொல்லிற்குப் பத்து எனப் பொருள்.yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shiyue பத்தாம் மாதமாகிய  அட்டோபர் திங்களைக் குறிக்கிறது. அட்டோபர் மாதம் என்பது பழைய உரோமன் நாட்காட்டியில் முதலில் எட்டாவது மாதமாகத்தான் இருந்தது.  ôctō என்னும் சொல்லிற்குக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் 8…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 (இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.) 1.       மேலாளரைக் கண்டாயா? 2.       ஆட்சியரைச் சந்தித்தேன். 3.       ஆலையைத் திறக்க வேண்டும்.  4.       செயலரைப் பார்க்கவில்லை. 5.       அணையைத் திறந்து விடுக.     6.       மருத்துவமனையைப் பார்வையிட்டார். 7.       தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.   8.       தொற்று நோய்களைத் தடுக்க வேண்டும். 9.       பதிவேடுகளைப் பேண வேண்டும். 10.      வேலையைச் செய்யத் தவறாதே. 11.      கிடங்கினைப் பூட்டவும். 12.      மருந்துகளைக் கொடு. 13.      சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திரு. 14.      முதலியவற்றைக் கொணர…

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல! “தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர்.  தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்: “ஓர் அம்மாவிற்கு…

வெருளி நோய்கள் 156 -160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 156 -160 156. அடுப்பு வெருளி – Kouziphobia   அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி. அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எரிவளி அடுப்பு என்று இல்லை….

வெருளி நோய்கள் 151 -155 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 146 -150 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 151 -155 151. அடிபந்தாட்ட வெருளி – Baseballphobia  அடி பந்தாட்டம்(Baseball) குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அடி பந்தாட்ட வெருளி. எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்விையச் சந்திக்க நேருமா என்ற கவலை வருவது இயற்கை. அடி பந்தாட்டத்தில் பந்து படக்கூாத இடத்தில் பட்டுவிடுமோ, பந்தால் காயம் ஏற்படுமோ, அடுத்தவருக்குக் காயத்தை ஏற்படுத்தி அதனால் சண்டை வருமோ என்றெல்லாம் தேவையின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். சிறு பருவத்தில் இவ்வாறு நேர்ந்ததாலோ அல்லது…

வெருளி நோய்கள் 146 -150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 146 -150 146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி. பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது. அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர். 00 147. அஞ்சல் வெருளி –  Postalphobia  அஞ்சல் தொடர்பான…

133/133. பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்? – சனாதனம் நிறைவு

(132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – தொடர்ச்சி) முதல் வினா இன்னும் சற்றே விரிவாகக் கேட்க வேண்டியது. ஏன் தமிழர்களா? என்று மட்டும் கேட்கிறீர்கள்? •             பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்கள் மலையாளிகளா? பிராமணர்கள் தெலுங்கர்களா? பிராமணர்கள் கன்னடர்களா? பிராமணர்கள் துளுவர்களா? பிராமணர்கள் மராத்தியர்களா? பிராமணர்கள் குசராத்திகளா? பிராமணர்கள் வங்காளிகளா? ….. பிராமணர்கள் காசுமீரிகளா? …… இப்படி நீண்டுகொண்டே போகவேண்டும் உங்கள் கேள்வி. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். ஏனைய மாநிலங்களில் இக்கேள்வி உள்ளீடாகத் தொக்கி நிற்கின்றது. புலம் பெயர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சென்ற பிறகும்…

வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 141 -145 141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி. இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான். counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக. 00 142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia  அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி. pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான…

132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி) பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில்…