நல்லுணர்வாளர் இணைப்பு – சுமதிசுடர்

  வல்லுணர்ச்சி கொண்டசிலர் இணைந்து கொண்டு    வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க, நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;    நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்; நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;    நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்; மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;    மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.   அன்புடன்  சுமதிசுடர்

என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) காட்சி – 13 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப் பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!) ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா? அன்பு மனைவியின் பணிவிடையை! பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்! பார்க்க அழகே! எனச்சொல்வேன்! (என்றே மேடையை நோக்கிய பின்) அதோ! அதென்ன ஒரு கும்பல்! நின்றே கூட்டத்தின் நடுவினிலே உரக்கக் கத்திப் பேசுவதேன்? ஆண் :     பேடை…

உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்

அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற…

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன்

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

தமிழனுக்கு யாவனுளன் ஈடு?

தமிழன் உடற்குருதி சூடு! தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! …உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்

  காட்சி – 12 அங்கம்    :     பூங்குயில்,  அருண் மொழி  இடம்      :     அருண்மொழி இல்லம்  நிலைமை  :     (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்:            காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்:    காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 11 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி…

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்      டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்      தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்      வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 10– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (தை 18 2046 / பிப்பிரவரி 01, 2015 தொடர்ச்சி)   காட்சி – 10   அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்     :     வீட்டு முன்வாசல் நிலைமை :     (சிற்றூர் வாழ்வை அறியத் துடிக்கிறான் அன்பு விராலியூர் சென்றதை விரித்து சொல்கிறார் கவிஞர்) அன்பு    :    அடுத்தவோர் காட்சி                        தொடங்கும் முன்னே!                      துடிக்குது நெஞ்சம்                     ஒன்றினை அறிய!                     நகரத்து வாழ்வை                    அறியவே விரித்து                   அகத்தில் நான்…