கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57

சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்

அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

மறைமுதல் கிளந்த வாயன்மதி      மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி      இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை      அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை      உள்நினைந்து ஏத்தல் செய்வாம் – கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து  

தமிழருமை அறியாதாரும் உளரோ

யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என் அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி நீயறிவித் தாலறியு நிலமுந் தானே? – பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45

யார் கவிஞன் ? – கவிஞர் முடியரசன்

  காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன் தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத் தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன் மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன் மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன் காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்…

தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக! தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே! தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக! தமிழகம் உலகத் தாயகமாகுக!   – கவியோகி சுத்தானந்த பாரதியார்  

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்     :       மரக்கிளை நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ                      பட்டென இருளைக் கிழித்தாற்போல்                              பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் :     அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண்     :     உணவேயின்றி…

இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்

  தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்  “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப.             இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி)   உ.1             என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி)   2             அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி)   3             அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி)   4             வரவரவே…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண்    :     மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல;                                                                                                                                                               கணவனே! வந்தேன்! பூங்       :     இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி – 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…

நாள்தோறும் நினைவில் 11 : ஆதாரங்களைப் பயன்கொள் – சுமதி சுடர்

ஆதாரங்களைப் பயன்கொள் இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களை பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா