பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3

(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 3 முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி கலிவிருத்தம் மோனை: அன்பே அருமருந்தேஅன்றுநீ சொன்னபடிபுன்னை மரத்தடியில்புலரும் பொழுதளவும்கண்ணைஇமை மூடாமல்காத்துநான் தவித்திருந்தேன்சொன்னசொல் மாற்றினாய்சுகம்ஏ மாற்றினாய் அல்லி: வேளை தவறாதுவீதியிலே நின்றபடிவாளை மீன்போல்வார்த்தை வழுக்கஊளை வாயின்ஊத்தைப் பல்காட்டும்மூளையிலாப் புலவரேமூச்சை நிறுத்தும் அறுசீர் விருத்தம் மோனை: புத்தம் புதிய மலராள்நம்புவியாள் மன்னன் மகளுக்குநித்தம் யாப்பை உரைக்குங்கவிநிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்தத்துப் பித்தென் றவனும்மிகப்பித்துப் பிடித்துப் பேசுவனேல்சித்தங் கலங்கா தென்னிடம்நீசிறிதும்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2   காட்சி : 2

(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 2 காட்சி : 2 உதாரன், மேடையில் தன்பகுதியில் அமர்ந்திருக்கிறான். இளவரசி மறுபுறமாக வந்து தன்னிருக்கையில் அமர்கிறாள் அறுசீர் விருத்தம் இளவரசி: அறிவுங் கொளுத்தித் தமிழ்ப்பாடல்அகமுங் குளிரப் பயிற்றுகிறசெறிவு மிக்கோய் செந்தமிழைச்சேர்த்து வணங்கி மகிழ்கின்றேன்நெறியாய்ச் செய்யுள் அடிப்படையைநேற்றே உரைத்தீர் நனிநன்றுகுறிப்பீர் இன்று தளையோடுகொள்ளுந் தொடையை முறையோடு கவிஞன்: வளையுள் வளைந்தி ருக்கும்வனப்புறு சாரை தானும்இளைய தவளை கவ்வஇருநீர் சீறிப் பாயவிளையுங் கரும்பின் பூவும்விதிர்த்திடும் தேன்பெ…

தமிழினப்   பகைவெல்ல   ஒன்றுக !-             புலவர் பழ.தமிழாளன்

தமிழினப்   பகைவெல்ல   ஒன்றுக! ஒருபகையாய்த்   தமிழினத்திற்(கு) இருக்குபகை    ஆரியம்                  உணர்ந்துதமிழ்    இனமதுவே உள்ளமதில்   வைத்துமே                 ஒருமையுடன் தமிழினமே  ஒன்றிணைந்து   பகையினை                  ஓட்டவேண்டும் தமிழ்நாட்டில்  உள்ளமொன்றி   நின்றுமே    அருளன்பே  உலகமதில் ஆக்கமுறு மழையென                   ஆர்த்துநின்று  பெய்வதனை  அனைவருமே  காணலாம்              இருப்பவரும்  இல்லாரும்  வேற்றுமையைக்  களைவரே                இமயமென வாழ்வுநலம்  எழுச்சியுற்றுத்  திகழுமே  !             புலவர் பழ.தமிழாளன்,       இயக்குநர்-பைந்தமிழியக்கம்,                  திருச்சிராப்பள்ளி.

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2   காட்சி : 1

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 1 அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –அகவல்அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்தமிழே…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 5

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 4 – தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 அரண்மனைப் பகுதி, அரசனும், அமைச்சனும் இருக்க, உதாரன் வருகிறான் கலி விருத்தம் அரசன்                    பண்பாடும் தமிழில்                                                 பழகுதமிழ்ப் பாடல்                                       விண்ணோடும் முகிலாய்                                                 விளைக்குங்கவி மன்னா                                       என்னினிய வணக்கம்                                                 எற்றருள்க ஈங்கே                                       பொன்னினிய  இருக்கை                                                 பொலிவுபெறச் செய்க உதாரன்                             என்னாடு வாழ்க                                                 இனியதமிழ் போற்றிப்                                      …

கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன்

கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின் வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும்  வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே. வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும் மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே  பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார் கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை அரசிலை எஃகம் தனியன் ஏந்தி  வரும் கொல் என துயில் மறுத்து நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்….

வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் –  புலவர் பழ.தமிழாளன்

வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசுகடன் 1. வடபுலத்தார்  தமிழ்நாட்டில்  வந்துகுடி  புகுந்தே     வண்டமிழ  நாட்டகத்தில்  வாக்காளர்  ஆயின் விடைகாண  முடியாத  நிலையாகும்  நிலத்தே     ஈழநிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடும் தேர்க கடனென்று  தமிழ்நாட்டை  ஆளுகின்ற அரசு    காவிவட வருகையினைத் தடைசெய்து விட்டால் நடமாடும்  பண்பாட்டின்  தொட்டிலாக விளங்கும்    நற்றமிழ  இனப்பகையும்  நாட்விட்டே ஓடும் ! 2. எம்மதமாய்  எச்சாதி  எக்கட்சி  சார்ந்தே      இருந்தாலும்  தமிழனென்ற  உணர்வு பொங்க  வேண்டும் தம்மன்னை  தமிழென்ற  நினைவோங்க  வேண்டும்     தம்பகையே  ஆரியமாய்த் …

இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான்

இருமை வகைத்தே இயற்கை நெறியே! அல்லது வெளிக்குமால் இல்லது கருக்குமால் வல்லது மெலிக்குமால் மெல்லது வலிக்குமால் புறத்தது அகக்குமால் அகத்தது புறக்குமால் நிறுத்த வியல்நிலை திரீஇ தோன்றலும் இருத்தலும் ஒடுங்கலும் வினையல் மும்மை இருமை வகைத்தே இயற்கை நெறியே! தொல்லூர் கிழான். சொற்பொருள் : அல்லது > அல் அது = இருள் நிலை என்பது வெளிக்குமால் = தன்னிலை மாறி வெளிறி வெளிச்சமாகுமாதலால் இல்லது > இல் அது  = இல் எனும் ஒளிமையாகிய வெளிச்சம் மாறி இருண்டு கருக்குமாதலால் வல்லது >…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4

(புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை:   பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப்           பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி           பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும்           பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப்           பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று           முத்து  விளையாட் டொன்றுஎன் முகத்தில்           மெத்தென் றாடினால்…

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச    வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று  வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /      வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும் மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ     மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள் வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்     வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே ! 2. கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்     கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும் மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்    …

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ உறுநிலம் உறைய புள்பறந்  தற்றே முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள் வதுவைப் பருவத்து  துடிஇடை முளையல் அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான் வரிப்படை வேட்புற காந்த ளகத்து மகற்படை அன்ன மகட்படை மறவம் அகத்தே   உயிர்த்த அறநெறி தழீஇ விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே தொல்லூர் கிழான் விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து; தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 அரசனும், அமைச்சனும் அமர்ந்திருக்க இளவரசி வருகிறாள் கலி விருத்தம் அமைச்சர் :         குலம்விளங்க வந்துதித்த                                       கொழுந்தே வருக                              புலம் வியக்குஞ் செந்தமிழின்                                       பொழிவே வருக                              இலம்விளக்கும்   இந்நாட்டின்                                       ஒளியே      வருக                              நலம்பயக்கும்     எம்மரசின்                                       இழையே வருக இளவரசி:             குடிகாத்து நலம்விளைக்குங்                                       கொற்றவ வணக்கம்                              முடிவில்சீர் தமிழ்காக்கும்…