வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 – முனைவர். ப. பானுமதி
(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 தொடர்ச்சி) 2 ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே, மனித எச்சங்களெல்லாம் மக்கிப் போனவுடன் தூது அனுப்புகிறேன் அதுவரை உங்கள் துப்பாக்கி முனையை குத்தகைக்கு விடுங்கள் குருவிகள் கூடு கட்டி குடும்பம் நடத்தட்டும் ! என்று…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 : ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 நெடுஞ்செழியன் 1965 ஆம் ஆண்டு சனவரி 26 முதல் இந்தி மொழி, இந்தியாவின் பொது மொழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியது. அதனால் தமிழ்நாட்டில் இந்திமொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் ஒன்று 1964 செட்டம்பர் மாதம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று மீண்ட அவரைக் கவிஞர் வரவேற்று வாழ்த்துகிறார். செந்தமிழைக் காப்பதற்காக இந்தி மொழியின் ஆதிக்கத்தை…
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே மருண்டோடி பார்த்திருக்க வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று அதைக்காண ஆவலுடன் அன்றாடம் காத்திருப்பேன் ! பலபேர்கள் வந்தாலும் பார்த்துவிடா என்பார்வை இவள்மட்டும் வந்தவுடன் எனைமீறிச் சென்றுவிடும் நினைவெல்லாம் அவளாக நிறைந்திருக்கும் காரணத்தால் அவள்வருகை மட்டுமெந்தன் அகத்தினுள்ளே புகுந்துவிடும் ! சிலவேளை அவள்பார்ப்பாள் பலவேளை நான்பார்ப்பேன் …
நான்தான் கடவுள்! – ஆரூர் தமிழ்நாடன்
நான்தான் கடவுள்! நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக் கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்! எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்; எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்; மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்; வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை; வலிகள் என்று வருந்திய தில்லை; நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை; நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! இசைக்கென உயிரும்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க! பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! கவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4. தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது. இதனைச், ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 11. கொலை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…
நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்! – கவிஞர் கல்முனையான்
நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்! இனிய தமிழ் என்றும் இனிக்கும் தமிழ் கண்கள் பனிக்கும் தமிழ் உழைக்கும் தமிழ் என்றும் தழைக்கும் தமிழ் ஈழம் அழைக்கும் தமிழ் மிளிரும் தமிழ் என்றும் குளிரும் தமிழ் எம்மில் ஒளிரும் தமிழ் தங்கத் தமிழ் என்றும் சிங்கத் தமிழ் எங்கள் சங்கத் தமிழ் செந்தமிழ் என்றும் பைந்தமிழ் வாழ்வின் தேன்தமிழ் ஆல் தமிழ் ஆழ் தமிழ் அகிலம் ஆள் தமிழ் உன் தமிழ் என்றும் உண் தமிழ் தமிழனின் கண் தமிழ் கல்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09. பணத்தினைப் பெருக்கு! தொழில் நோக்கமும், தொழிலுக்கு அடிப்படைத் தேவையும் என்ன? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அன்றோ? “பொருளில்லார்க்கிலை யிவ்வுலகு என்றநம் புலவர்தம்மொழி, பொய்ம்மொழி யன்றுகாண் பொருளி லார்க்கின மில்லை, துணையில்லை பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால் பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்” (பக்கம் 255 / சுயசரிதை) எனும் பொய்யாமொழிப் புலவரைப் போன்று ‘செய்க பொருள்’ என்கிறார். பொருள் எதற்கு? “இல்லாமையை இல்லாமல் ஆக்குக இல்லை என்ற கொடுமை…
