எது பொங்கல்? – பாவலர் அன்பு ஆறுமுகம்
வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல் வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல் தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல் தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல் உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல் ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல் கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல் கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்! ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல் ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல் போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல் போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல் மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல் மடமையிருள் ஒழிப்பதற்கு நெருப்புப் பொங்கல் போற்றுவது தாய்மொழியை, பக்திப் பொங்கல்…
வாழி நெஞ்சே! – வளையாபதி
நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக்கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே ! வளையாபதி
பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்! – மாணிக்கவாசகர்
பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக அறமுதல் அரியெனும் அவனே பரனே அணுவினுள் அவனே செகமுணர் பரனே மனனே கரிசொல வருபுயல் பரனே அமுதரு ளினனே யவனே பரனே நிலனே வானே நிறைமுதல் பரனே வலனே தரிதிகி ரியனே பரனே இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப் பொன்னடி பணிபவர் புகுபதி பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம் நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன்ஆய மைந்தனோடு என்னவகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகுஏழ் என திசைபத்து என தான்…
எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு
அறிவொளி இறைவா போற்றி போற்றி அம்மை யப்பா போற்றி போற்றி எந்தாய்த் தமிழே போற்றி போற்றி எந்தை நாடே போற்றி போற்றி தெய்வப் புலவா போற்றி போற்றி திருத்தகு குருவீர் போற்றி போற்றி திருவெலாந் தருவீர் போற்றி ஓம்! – திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி
யாவும் நீ! – தாயுமானவர்
யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக் கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ; துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ; ஆவி, யாக்கை நீதானே ! தாயுமானவர்: சொல்லற்கரிய: 5
அல்லல் அறுப்பானை வாழ்த்துக! – மாணிக்கவாசகர்
அல்லல் அறுப்பானை வாழ்த்துக! சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே! – மாணிக்கவாசகர்
எண்ணியதை முடிக்க அருள்க! – நாலடியார்
வான் இடு வில்லின் வரவு அறியா, வன்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை, யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும் “எம் உள்ளத்து முன்னியலை முடிக!” என்று – நாலடியார், கடவுள் வாழ்த்து
வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்
தாந்தித்திமி தந்தக்கோனாரே தீந்திமித்திமி திந்தக்கோனாரே ஆனந்தக்கோனாரேஅருள் ஆனந்தக்கோனாரே ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன் அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன் மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்) பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே. வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.” – அகப்பேய்ச் சித்தர்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு, “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி) 14 நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார். ‘ நெல்லைக்குரிய நீள்கல் லூரியில் பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16 நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப்…
அறமே தெய்வம்! – பாரதியார்
அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல் லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . . தேசத் துள்ள இளைஞ ரறிமினோ! அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால் அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால். – பாரதியார்
நம் கடமை! – பாரதியார்
கடமை யாவன தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் . . . . . . . . . . . . . உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல் இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும் . . . . . . நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் சிந்தையே இம்மூன்றும் செய்! – பாரதியார்
