வளந்தரும் வாழ்த்து

வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் தங்கவேலன்

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர் மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே ஓங்கும் வையகம்! வையகம் முழுமை தமிழாக வைத்திடு தாய்மொழி அமுதாக வந்திடும் தமிழ்தைப் பொங்கல்! பொங்கல் இல்லா நல்மனமே புழுங்கல் இல்லா ஒருகுணமே போற்றும் தமிழர் பன்பாடு! பன்பாடு காக்கும் நன்நாளே…

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே!  – தமிழ நம்பி  

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…

இனிமைத் தமிழெடுத்து இதயம்குளிர வாழ்த்துவோம் ! : கந்தையா – செயம்

  ஆர்கலி  உலகிடை   மார்கழிப்   பெண்ணாள் ஆடிமுடித்தாள்  பின்அவள்  அடிஎடுத்து  வைத்து ” தை தை ” என     நடைபோட்டு  தையலவள்  நடந்ததால் தைத்திங்கள்   பிறந்ததோஅத்     தையே  தமிழ்ப் புத்தாண்டு !   தகுமிகு  முத்தமிழ்   முன்னோர் பத்தாயிரம்  ஆண்டாய்  பழக்கத்தில்  கைக்கொண்ட புத்தாண்டுக்   கொள்கை  பொங்கிய  கடல்பேரழிவில் புதைந்து  போனதை   விதந்தநம்   சான்றோர்கள்கூடி ஆய்ந்து   ஆய்ந்து  அறுபதாண்டின்   முதலாண்டை சிதைந்த   தமிழரிடம்  …

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…

பொங்கல் திருநாள் வாழ்த்து! – கா.வேழவேந்தன்

இன்பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! உள்ளத்தில் ஆட்சி செய்யும் உயரிய சுடரே! ஓயா வெள்ளங்கள் ஓய்ந்த பின்னால் விழாப் பொங்கல் வந்ததீங்கே! கள்ளமில் தங்கள் நெஞ்சக் கனவெலாம் வெல்க! தாங்கள் கொள்ளைஇன் பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! வாடாத அன்பால், என்றும் வற்றாத பற்றால், பேதம் நாடாத பண்பால் நெஞ்சில் நங்கூரம் இட்டோர் தாங்கள்! தேடாமல் தேடிப் பெற்ற செல்வமே! அறிவே! அன்பே! நீடூழித் தாங்கள் வாழ நெஞ்சார வாழ்த்து கின்றேன்!   கவிவேந்தர் கா.வேழவேந்தன் 94444 50167

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி)   அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…

தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலமெனும் கோளமதில் முன்பி றந்து ஞாயிற்றின் சுடரெனவே ஒளிப ரப்பிக் காலமெலாம் நின்றிருக்கும் நூல்கள் தந்து கவின்பெற்றுக் கலையுற்று வாழும் தாயே தாலசைத்தால் தமிழாகும் இயற்கை சொல்லும் தத்துவத்தின் வித்தகமாய் இலங்கு வாயே சாலவுனை வேண்டுவது தவத்தின் மேலாம் தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! நற்றிணையும் குறுந்தொகையாம் வரிசை எட்டும் நல்லதிரு முருகாற்றுப் படைதொ டங்கிச் சொற்றிறங்கள் காட்டுகின்ற பத்துப் பாட்டும் சுவையூட்டும் காப்பியங்கள் ஐந்தும் ஆகி மற்றுமுயர் பலசமய நூல்கள் தாமும் மாற்றரிய புதுமைசெயும் புலவோர் நூலும் எற்றானும் உனைமறவா நிலையில் நாளும்…

அகமே நீ வாழ்த்துக! – மேதை வேதநாயகம்

அகமே நீ வாழ்த்துக! கதிரவன் கிரணக் கையால்             கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்             துதிசெயும் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும்             பூதம்தம் தொழில்செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்             அகமேநீ வாழ்த்தா தென்னே மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! – இராமலிங்க வள்ளலார்

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்             சாத்திரக் குப்பையுந் தணந்தேன் நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும்             நித்திய வாழ்க்கையுஞ் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்             அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீயறிந் ததுதான்             உரைப்பதென் னடிக்கடி யுனக்கே குலத்திலே சமயக் குழியிலே நரகக்             குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து             நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன்             மகிழ்ந்துநீ யென்னுள மெனும்…