பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10  தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும்.   இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து.   பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது.   முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது.   முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி      பேசி -98415 93517.

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5  தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10   நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து.   குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து.   போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு.   குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து.   ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…

நிலா நிலா – அழ.வள்ளியப்பா

நிலா நிலா   ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம்.   எத்த னைநாள் பாடியும் ஏனோ நீயும் வரவில்லை. சத்தம் போட்டுப் பாடியும் சற்றும் நெருங்கி வரவில்லை. உன்னை விரும்பி அழைத்துமே ஓடி நீ வராததால் விண்க லத்தில் ஏறியே விரைவில் வருவோம் உன்னிடம் !   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும்…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5: தி.வே.விசயலட்சுமி

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார் செய்தார் குறள்நூல் செறிந்து.   குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப் பற்றியே வாழ்வோம் பணிந்து.   எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால் செம்மொழிக்குச் சேரும் சிறப்பு.   வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின் நீதியை நெஞ்சே நினை.   வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத் தள்ளுவர் சீர்அள் ளுவர்.   -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 – 10)

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் – பாரதியார்

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால், நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே! – பாரதியார்

திருக்குறள் அறுசொல் உரை – 096. குடிமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 095. மருந்து தொடர்ச்சி) 02. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 096.  குடிமை உயர்குடியில், குடும்பத்தில் பிறந்தாரின் இயல்பும், பெருமையும், சிறப்பும்.   இல்பிறந்தார் கண்அல்லது இல்லை, இயல்பாகச்      செப்பமும், நாணும் ஒருங்கு.   நேர்மையும், பழிக்கு நாணலும்,         நல்குடிப் பிறந்தார்தம் இயல்புகள்.   ஒழுக்கமும், வாய்மையும், நாணும்இம் மூன்றும்      இழுக்கார் குடிப்பிறந் தார்.     ஒழுக்கத்தில், உண்மையில், நாணத்தில்,         உயர்குடிப் பிறந்தார் தவறார்.   நகை,ஈகை, இன்சொல், இகழாமை நான்கும்      வகைஎன்ப, வாய்மைக் குடிக்கு.  …

ஒன்றாய் இருத்தலைப் பார்க்கிறோம் – அழ.வள்ளியப்பா

ஒன்று சேர்தல்            கூட்டம் கூட்ட மாகவே குருவி பறந்து சென்றிடும். குவியல் குவிய லாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும். கூறு கூறாய்ச் சந்தையில் கொய்யாப் பழங்கள் விற்றிடும். குலைகு லையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும். வரிசை வரிசை யாகவே வாழைத் தோப்பில் நின்றிடும். மந்தை மந்தை யாகவே மாடு கூடி மேய்ந்திடும். சாரை சாரை யாகவே தரையில் எறும்பு ஊர்ந்திடும். நேரில் தினமும் பார்க்கிறோம் நீயும் நானும் தம்பியே! – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?   பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 1.14. சூது விலக்கல் சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி. சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும். பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல். சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும். அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும். சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும். சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12   பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க! “அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும் அன்பினில் போகும்” (பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா) என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார். “பொலிவிலா முகத்தினாய் போ போ போ … … … … … … … … … … … … … … சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ ஒளி படைத்த கண்ணினாய்…

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…