தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!

  ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!   அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!   அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!   அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…

தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!

  கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க!   மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…

மேன்மையாய் வாழ்வோம்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

மேன்மையாய் வாழ்வோம்! செய்திகள் படிப்போம் சிந்தனை நிறைப்போம்! கைத்தொழில் கற்போம் கவலையை ஒழிப்போம் பொய்சூது விடுவோம் போதும்மனம் கொள்வோம் மெய்யைப் பேசுவோம் மேன்மையாய் வாழ்வோம்! வைகறை விழிப்போம் வாய்விட்டுச் சிரிப்போம்! பைகாசு வைப்போம்! பைய நடப்போம்! வாய்மை காப்போம் வாக்கு நிறைவேற்றுவோம்! தாய்மை போற்றுவோம்! தாரத்தை ஆராதிப்போம்! நாய்தனை வளர்ப்போம்! நன்றியை மறவோம்! வாய்ச்சவடால் செய்யோம்! வாலிபனாய் வாழ்வோம்! எய்அம்பாய் மெய்செய்வோம்! எங்கும்சென்றே நலமாக்குவோம் நய்நய்என நச்சரியோம்! நண்பர்களைச் சேர்த்திடுவோம்! பாய்விரித்தே படுத்திடுவோம் பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்! நோய்நொடி விரட்டிடுவோம் நூறைக்கடக்க வழிகண்டோம்! மாம்பலம் ஆ.சந்திரசேகர்…

திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை.   மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன       ஒப்பாரி யாம்கண்ட(து) இல்.  மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர்.   நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்;       நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார்.   தேவர் அனையர் கயவர்,…

திருக்குறள் அறுசொல் உரை 107. இரவு அச்சம் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 106. இரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 107. இரவு அச்சம் உழைக்கும் திறத்தர், மானத்தர், பிச்சை எடுக்க அஞ்சுதல். கரவா(து), உவந்(து)ஈயும், கண்அன்னார் கண்ணும்,       இரவாமை கோடி உறும். மறைக்காது, மகிழ்ந்து கொடுப்பாரிடமும், பெறாமை கோடிப் பெருமை.   இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து       கெடுக, உல(கு)இயற்றி யான் பிச்சையால்தான் வாழ்வுஎன்றால், ஆட்சியான், அலைந்து திரிந்து கெடட்டும்.   “இன்மை இடும்பை, இரந்து,தீர் வாம்”என்னும்…

திருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல்        அதிகாரம் 106. இரவு உழைப்புத் திறன்இல்லார், பொதுநல உதவியாளர் கேட்டுப் பெறலாம். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின்,       அவர்பழி தம்பழி அன்று. தகுதியாரிடம் உதவி கேட்க; மறைத்தால், மறைத்தார்க்கே, பழி.   இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை       துன்பம் உறாஅ வரின். துன்பம் இல்லாமல் வருமானால், கேட்டுப் பெறுதலும் இன்பம்தான்.   கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார்…

திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின்       இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது.   இன்மை எனஒரு பாவி, மறுமையும்,       இன்மையும் இன்றி வரும்.      வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும்.   தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,     …

திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு  உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை.     சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,       உழந்தும் உழவே தலை.      உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய்.   உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)       எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர்.   உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25   நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு.   அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு.   23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.   24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம்  தவிர்த்துவாழ் வார்.   25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி   பேசி –…

திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை –  102. நாண் உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால்   13.குடி இயல் அதிகாரம்   103. குடி செயல் வகை குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள்.  ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும்       பெருமையின், பீ(டு)உடைய(து) இல். ”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்” என்பதே பெரிய பெருமை.   ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின்       நீள்வினையால் நீளும் குடி. நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த தொடர்செயல் குடியை வாழ்விக்கும்.   “குடிசெய்வல்” என்னும்…

திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல்        அதிகாரம்    102. நாண் உடைமை    இழிசெயல் வழிவரும் அழியாப்  பழிக்கு வெட்கி,அது ஒழித்தல்.     கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்       நல்லவர் நாணுப் பிற.  பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்;         மகளிர்தம் வெட்கம், வேறு..   ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல;       நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு.   ஊனைக் குறித்த…

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள்

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற ……(5) மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று …..(10) சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக்…