தமிழ்நாடும் மொழியும் 19: பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 18 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 19 பல்லவப் பேரரசு தொடர்ச்சி அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது ‘தருமராச இரதம்’ என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாசுகந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று…
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 4/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-3/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 4/6 தமிழ்த் தொண்டு 1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம் மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ துளு: திருந்திய தமிழ்க் குடும்ப மொழிகளுள் துளுவும் ஒன்று. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில், கவின் மலையாளமும் துளுவும் என இடம்பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது. குடகு என்னும் மொழியை ஒத்துக் கன்னடத்தினின்றும் சிறிதும், மலையாளத்தினின்றும் பெரிதும் வேறுபட்டுள்ளது. தமிழ்ச்சொற்கள் பலவற்றை அப்படியே கொண்டிருப்பினும் பல சொற்களை உருமாற்றியே வழங்குகின்றது. இதற்குத் தனி எழுத்தோ பழைய இலக்கியச் சிறப்போ இல்லை. கிருத்துவத் தொண்டர் குழாம் கன்னட எழுத்திலும் துளுவப் பார்ப்பனர் மலையாள எழுத்திலும் இம் மொழியை…
தமிழினப் பகைவெல்ல ஒன்றுக !- புலவர் பழ.தமிழாளன்
தமிழினப் பகைவெல்ல ஒன்றுக! ஒருபகையாய்த் தமிழினத்திற்(கு) இருக்குபகை ஆரியம் உணர்ந்துதமிழ் இனமதுவே உள்ளமதில் வைத்துமே ஒருமையுடன் தமிழினமே ஒன்றிணைந்து பகையினை ஓட்டவேண்டும் தமிழ்நாட்டில் உள்ளமொன்றி நின்றுமே அருளன்பே உலகமதில் ஆக்கமுறு மழையென ஆர்த்துநின்று பெய்வதனை அனைவருமே காணலாம் இருப்பவரும் இல்லாரும் வேற்றுமையைக் களைவரே இமயமென வாழ்வுநலம் எழுச்சியுற்றுத் திகழுமே ! புலவர் பழ.தமிழாளன், இயக்குநர்-பைந்தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி.
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17 அத்தகைய சிற்றூர்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு சில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவத்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு திருச்சிற்றேமம் ஆயிற்று. நாளடைவில் அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது. நெடுமையும் குறுமையும் சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 576 -580 
( தமிழ்ச்சொல்லாக்கம் 571-575 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 576-580 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 576. Table Talk – உண்டாட்டுரை இதழ் : நச்சினார்க்கினியன் (1926) பக்கம் : 58 மொழிபெயர்ப்பு : நச்சினார்க்கினியன் ஆசிரியர்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 83
(குறிஞ்சி மலர் 82 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 29 தொடர்ச்சி “நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 1
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 1 அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –அகவல்அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்தமிழே…
அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)- இலக்குவனார் திருவள்ளுவன்
அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15) (அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14) தொடர்ச்சி) கடந்த முறை “அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். அறநிலையத்துறை ஆற்ற வேண்டிய அரும்பணிகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். முதலில் தமிழ் வழிபாட்டு நிலையைக் காண்போம். அறநிலையத்துறை யமைச்சர் சேகர்பாபு, மக்கள் மகிழும் வண்ணமும் முதல்வர் மு.க.தாலின் செயல் பாபு எனப் பாராட்டும் வண்ணமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆதலின்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 571-575
(தமிழ்ச்சொல்லாக்கம் 566-570 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 570-575 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 571. General Hosptial – பொது மருத்துவச் சாலை 11ஆந்தேதி வெள்ளிக்கிழமை மாலை அவர்தம் திருமேனியை, விழாக்கோலத்துடன், அரசாங்கப் பொலிசுப்படை புடைசூழ்ந்து மரியாதை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 19
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 18 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 11விளையாட்டும் விந்தையும் விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல் விளையாடுவேன். கண்டால் அடித்துவிடுவா ரென்ற பயம் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டு மென்பது அவரது நினைவு. என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர் நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்பிப்பதுண்டு; அவர் வார்த்தைகளால் கடிந்துகொண்டு போதிப்பார்; சில சமயம் அடிப்பார். என் தந்தையாரோ…
தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன்
தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும் பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351) பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும். உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த…
