உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை?  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23   பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21)   நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22)   அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…

சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 9  சிவனும்  தென்னையும்   நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும்  வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும்  நற்றென்னை பாரில்  சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ்  நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும்  நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…

மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 1/2 – கருமலைத்தமிழாழன்

  எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா  கவியரங்கம் இடம் —  எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம்  மதுரவாயில்  சென்னை நாள் :  பங்குனி 30, 2048 / 12 – 04 -2017 தலைமை –  கவிமுரசு  ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தலைப்பு – மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர் பாடும் கவிஞர் – பாவலர் கருமலைத்தமிழாழன் தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்           களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்           இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட…

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்     மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!   திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.   நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா…

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

பாடல் வகைகள்

பாடல் வகைகள்   குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…

கூத்து வகைகள்

கூத்து வகைகள்   1. குரவை 2. துணங்கை 3. வெறியாட்டு 4. கொடுகொட்டி 5. பாண்டரங்கம் 6. கபாலம் 7. வள்ளிக்கூத்து 8. வாளமாலை 9. துடிக்கூத்து 10. கழல்நிலைக் கூத்து 11. உரற் கூத்து 12. மற்கூத்து 13. குடக்கூத்து 14. மரக்கால்கூத்து 15. தோற்பாவைக் கூத்து 16. ஆரியக் கூத்து (கயிறாட்டம்) 17. தேசிக் கூத்து 18. வடுகுக் கூத்து 19. சிங்களக் கூத்து 20. சொக்கக் கூத்து 21. அவிநயக் கூத்து 22. கரணக் கூத்து 23. வரிக்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30   இருபத்தொன்பதாம் பாசுரம் இளையாரையே இனிப் பயிற்றுவோம்! யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்! தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ? மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே ! நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத் தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம் நற்றமிழை! பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்! மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் !   முப்பதாம் பாசுரம் இல்லமும் நாடும் ஓங்குக!…

எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை   ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம்…