ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்!

ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? ஏதிலியர் (அகதிகள்) முகாம்களில் இருந்தும் மறுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட முன்னாள் போராளிகள், இனம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால், இந்த இனம் புரியாச் சாவுகளின் பின்னணியில்…

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! – ந.அருண் பிரகாசு இராசு

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்!    ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….

விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு

விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள்   தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.   இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…

பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு – நா. கணேசன்

பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு     பகழிக்கூத்தர் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்தவர். கவி காளமேகம்போலச்  சைவம் பாடிய வைணவர். திருச்செந்தூர் முருகன் சோதிக்க திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என அழகான பனுவல் பாடிய பெரும்புலவர். சீவகசிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூலும் பாடியவர். அதனைச் சருக்கரை இராமசாமிப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். (குறைப்படி). அதில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் பகழிக்கூத்தர் பெயர்க்காரணமும், அவரது ஊரும் விளங்குகிறது. திண்டிம கவி என்று அருணகிரிநாதர் அழைக்கப்பட்டதும் பகழிக்கூத்தர் பாடலால் தெரிகிறது. இவற்றை மு. இராகவையங்கார் பல…

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் – புத்தனேரி இரா.சுப்பிரமணியம்

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் பொல்லாப் பகைக் கூட்டம்                 புகழ்பெற்ற செந்தமிழின் செல்வத்தைக் கொள்ளையிடும்                 திட்டத்தால் ஏடுகளைக் கடத்திமறைப்பார்கள்;                 கருத்தைச் சிதைப்பார்கள் கடலில் எறிவார்கள்;                 கனலில் எரிப்பார்கள் கவிஞர் புத்தனேரி இரா.சுப்பிரமணியம்: தமிழில் நாட்டிய நாடகங்கள்: தமிழகக் கலைச் செல்வங்கள் பக்கம்.205

தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! தமிழன் னையைக் கைவிடாதே தாங்கி உயிரை அணைப்பவளாம்! அமிழ்தக் கலசம் கையேந்தி அன்பு கலந்து கொடுப்பவளாம்! குமிழைப் போன்ற வாழ்க்கையிலே குன்றா விளக்காய் ஒளிதருவாள்! தமிழில் பாடி மனமுருக தானே அருள்வாள் தமிழன்னை! தாமோதரன் கபாலி

மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 தொடர்ச்சி) மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன்.   ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு…

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி

பாசக்கயிறா? வேசக்கயிறா? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாசக்கயிறா? வேசக்கயிறா?     தமிழ்நாட்டில் இறைநம்பிக்கை சார்ந்து காப்புக்கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. ‘இரட்சா பந்தன்’ என்பதும் பாதுகாப்பு தரும்  உறவை உறுதிப்படுத்துவதற்கான  காப்புக்கயிறுதான். கீற்றுகளை இணைத்து உருவாக்கப்படுவது பந்தல். முத்துகளை இணைத்து உருவாக்கப்படுவது முத்துப்பந்தல். இவைபோல் உறவுகள் இணைந்த அமைப்பே பந்தம். பாசக்கட்டினைக் குறிக்கும் பந்தம் என்பது தமிழ்ச்சொல்லே. பந்தத்திற்குரியவன் பந்தன் என்றாகியுள்ளது.  ‘இரட்சா பந்தன்’ கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் கிருட்டிணனுக்குக் கையில் அடிபட்டுக்  குருதி வடிந்த பொழுது பாஞ்காலி, அவரது கையில் தன்சேலைத்தலைப்பைக் கிழித்துக் கட்டியதாகவும் இதனால்…

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை!   தமிழ்மக்களுக்கான தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை ஆங்கில மன்றமாக ஆக்கும் முயற்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அமைதிகாத்து ஆங்கிலக்காவலர்களாக விளங்கும் தி.மு.க. முன்னணியினரும் கண்டிக்கத்தக்கவர்களே! எனவே, விரைவில் தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இவர்களை அழைத்துக் கண்டித்தும் அறிவுறுத்தியும் பொதுவிலும் அறிக்கை விட வேண்டும்.   முதலில் மேனாள் அமைச்சர் பழனிவேல்இராசனின்(P.T.R.) மகன் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து மேனாள்அமைச்சர் த.இரா.பாலு (T.R.Balu)வின் மகன் இராசா ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.   இவர்கள் கூறும் சப்பைக்கட்டு, முதல்வருக்கு ஆங்கிலம்…

இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

இறப்பின்றி வாழலாம் வா! பட்டுப்போன பனை மரமும் கிளிகளுக்கும் ஆந்தை மரங்கொத்திக்கும் வாழப் பொந்தாகிறது ஏ….மாந்தனே! உயிர்விட்டுப் போனபின் மண்ணோடு மண்ணாகிறாய் இல்லெனில் நெருப்பில் சாம்பலாகிறாய் நீ நினைத்தால் கண்ணற்றவர்களுக்குக் கண்ணாகலாம் மீண்டும் இவ்வுலகை நீ பார்க்கலாம் இருக்கும் போது குருதிக் கொடை இறந்த பின்னர் உறுப்புக் கொடை வள்ளல் ஆகலாம் வா! புதுவைத் தமிழ்நெஞ்சன்