மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன – க.த.திருநாவுக்கரசு

மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன “தனது உயிரைக் காக்கவும் தன்னைச் சார்ந்தவர்கள் உயிரைக் காக்கவும் வன்முறைச் செயல்களில் ஒருவன் ஈடுபடலாம்” (8: 347350) எனவும், மூன்று நாள்கள் பட்டினி கிடப்பவன் மறுநாளைக்கும் அதே நிலைதான் என்பதை அறிந்தால், அவன் திருடலாம்” (11:16) எனவும் மனுஉரிமை அளிக்கின்றார். ஆனால், திருவள்ளுவரோ, “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்?’ என வினவுவதோடு நிற்காமல், “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்செய்யற்க. சான்றோர் பழிக்கும் வினை’ என அறிவுறுத்துகின்றார். இத்தகைய அடிப்படைக் கொள்கை…

திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் – தமிழண்ணல்

திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும்   திருவள்ளுவர் தனிமனித முன்னேற்றமே பெரிதும் சமுதாய முன்னேற்றம் என்று கருதுகிறார். அதனால், பெரும்பாலான குறள்கள் தனி மனிதனை நோக்கியன எனக் கருத இடந்தருகின்றன. ஒவ்வொரு மனிதன் பக்கத்திலும் நின்று தாயாய், தந்தையாய், அண்ணனாய், ஆசானாய், அறநெறி காட்டுகிறார். அவனவன் நிலைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் தட்டிக் கொடுத்து “முயல்க முன்னேறுக’ என அவர் கூறும் நெறிமுறைகள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்ச்செம்மல் தமிழண்ணல்: வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் – கா.பொ.இரத்தினம்

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் “கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான். -தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்

திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை – கா.பொ. இரத்தினம்

திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை   பல துறைகளிலும் மனிதனை மனிதனாக வாழ – பிறர் உதவியின்றி வாழ –  தனக்கும் பிறருக்கும் பயன்பட – வழிகாட்டிய தனிச்சிறப்பினாலே தமிழ்மறையை (திருக்குறளை) யாவரும் போற்றத் தொடங்கினர். பிற நாட்டு மக்களும் இதன் பெருமையை அறிந்தவுடன் தம்முடைய மொழிகளிலே மொழி பெயர்த்துத் தம் மக்களும் பயனடையச் செய்கின்றனர். மக்கள் யாவரையும் முழு மனிதராக்கும் தமிழ் மறையைப் போன்று சிறந்தோங்கும் இலக்கிய நூல் இவ்வுலகில் வேறொன்று மில்லை. தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்

நூல் என்றால் திருக்குறளே! – மு.கருணாநிதி

நூல் என்றால் திருக்குறளே! ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல் இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்; கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத் தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள். மலர் என்றால் தாமரைதான் நூல் என்றால் திருக்குறளே எனப் போற்றும் அறப்பனுவல் அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார். கலைஞர் மு.கருணாநிதி: இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா

சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் – கதிர் மகாதேவன்

சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர்   முப்பால் (திருக்குறள்) தோன்றுவதற்கு முன்னால் இருந்த கவிஞர்கள் உள்ளதை உணர்ந்தவாறு கவிதை புனைந்த வித்தகர்கள். ஆனால் இன்பத்தில் எளியரான சிலர் மருதத் திணையைப் பாடினர். சிலர் அதனை இழிவெனக் கூறி மன்னனைக் கடிந்தாரலர். கள் உண்டனர்; அதனைப் பாடவும் செய்தனர். அது தவறு என்று எண்ணினாரலர். புலால் உண்டனர்; அது இயல்பெனப் பாடு பொருளாயிற்று. இந்தச் சூழலில் தமிழர் சிக்கிச் சீரழிந்த நிலையில் தோன்றியவர்தாம் பெருநாவலர் வள்ளுவர். தாம் வாழ்ந்த சமுதாயத்தையும் தமக்கு முன்னால் நிலவிய…

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் – அ.கி.பரந்தாமன்

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும்   தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது…

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள்  மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! – இலக்குவனார் திருவள்ளுவன்

பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை!  நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும்  மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம்.  ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம்,  நாட்டை  ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம்.  ஆனால்,…

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்!     இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும்  மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது.  தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம்,  போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது.   இது தொடர்பான முதல்வரின் சொல்லும்  அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம்  அரசின் போக்கு மாற வேண்டும்.   10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை  துய்த்த…

பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1

தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1   வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!   25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின்  -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள்.   இருள்சூழ்ந்த…

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை   திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…