பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! – இலக்குவனார் திருவள்ளுவன்

பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை!  நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும்  மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம்.  ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம்,  நாட்டை  ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம்.  ஆனால்,…

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்!     இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும்  மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது.  தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம்,  போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது.   இது தொடர்பான முதல்வரின் சொல்லும்  அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம்  அரசின் போக்கு மாற வேண்டும்.   10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை  துய்த்த…

பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1

தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1   வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!   25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின்  -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள்.   இருள்சூழ்ந்த…

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை   திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…

தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்

தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் எதிர்ச்சொல் மாத்திரமே! ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை! அதன் பொருள் தோல்வியல்ல! நீ எவ்வாறு வெற்றி கொள்வது என்பதற்கான படிப்பினைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்! அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள்! தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே! தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே! உன் முயற்சிக்கான வெற்றிகளே! உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ…

சொல் ஓவியம் – சாமி.சிதம்பரனார்

சொல் ஓவியம்   பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத்தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஓர் ஒளி விளக்கு பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய சங்கக்கால இலக்கியங்கள்.   இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பதுபோல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.   பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட…

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன – தி.வை.சதாசிவம்

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன   கல்வெட்டுகள் என்பன கோயில் சுவர்கள், கற்பாறைகள் மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துகளேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுகள் என்ற தலைப்பின்கீழ் அடக்கிக்கொள்வது பொருந்தும். … கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் எல்லாம் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர் – அ.சிதம்பரனார்

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர்   எல்லாத் தேயங்களிலும் பாச் செய்யுட்கள் வாயிலாகவும் நாட்டுப்புறத்தாருடைய பேச்சு வழக்கு வாயிலாகவும் மொழியின் பண்டைய நிலை அறியப்படும். தொலைவில் உள்ள நாட்டுப்புறங்களில் வாழும் தாழ்ந்த வகுப்பு மக்களுடைய தமிழ்ப் பேச்சு, சமற்கிருதத்தினின்று வந்த சொற்களை ஆளாதிருக்கும் வகையில் பழந்தமிழைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.   இதன் உண்மை கல்லைச் “சிலை’ என்றும், மலையை “அசலம்’ என்றும் மரத்தை “விருட்சம்’ என்றும் பூவை “புட்பம்’ என்றும் வழங்காத நாட்டுப்புறப் பேச்சு வழக்கால் அறியத்தகும்.   பொழுதினைச் “சமயம்’ என்பாரும் பெயரினை”நாமம்’…

தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும் – திரு.வி.க.

தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்   பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு!  அன்பின் விளைவு!  அன்பின் வண்ணம்! தமிழ்த்தென்றல் திரு.வி.க.: திருக்குறள் விரிவுரை: அறத்துப்பால்:…

பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க.

பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க.  மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவு என்னும் ஞானம்பெற எவருங் காட்டுக்குப் போக வேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக…

நாள் கணக்கிடும் முறை – சி.இலக்குவனார்

நாள் கணக்கிடும் முறை   நள்ளிரவு அரைநாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்ற ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும். -செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க…

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்   இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…