வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே!

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே  தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும். – இரா.வேங்கட கிருட்டிணன்: தமிழே முதன் மொழி: பக்.389 – தமிழ்ச்சிமிழ்  

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்      டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்      தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்      வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 10– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (தை 18 2046 / பிப்பிரவரி 01, 2015 தொடர்ச்சி)   காட்சி – 10   அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்     :     வீட்டு முன்வாசல் நிலைமை :     (சிற்றூர் வாழ்வை அறியத் துடிக்கிறான் அன்பு விராலியூர் சென்றதை விரித்து சொல்கிறார் கவிஞர்) அன்பு    :    அடுத்தவோர் காட்சி                        தொடங்கும் முன்னே!                      துடிக்குது நெஞ்சம்                     ஒன்றினை அறிய!                     நகரத்து வாழ்வை                    அறியவே விரித்து                   அகத்தில் நான்…

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்   கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை   மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி   இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. – மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.   திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57

சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்