தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !
உலகின் வடிவம் உருண்டை என்பதை உருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார் கலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு கருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால் ஈராயிரத்து ஐநூறுக்குமுன்னே சீராயிரம் படைத்த இருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன் உருவான உலகம் உருண்டை என்றே இருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே ! ” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால் உழந்தும் உழவே தலை ” என்றாரே படித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா ? பிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும் நிழலாக இருக்கிறதென …
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6
(முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…
வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்
மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…
அழகு மங்கை
– அன்பு இன்று மாலை தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும், இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில் அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….
இயற்கை எழில் !
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத் தான்தழுவி ஒளிஉமிழும் தண்நிலவில் கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில் மண்மீது படுத்தேன்என் கண்முன்னே தொங்கிச் சுழலும்இப் பூமிப்பந்தில் தங்கிவாழும் மக்கள்குலம் தழைக்க பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய் இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள் குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம் அறிந்த நெய்தல்பாலை எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை அழகுடன் பார்த்தேன் மூவகைத் தமிழுடன் முத்திரைபதித்து பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள் பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி ! எங்கு பார்க்கினும் மக்களெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும் வறுமையைப் புறந்தள்ளி வாழும் வளமையும் கண்டேன் நாட்டில் ! இயற்கை அன்னை …
வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்
– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும். எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…
கை வீசம்மா கை வீசு! – இளவல்
கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…
நீதான் கண்ணே அழகு! – அன்பு
அம்மா! நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப முகவடிவமும் மாறும்….
என் தாய்
– திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329 தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன் தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்! செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்! உனக்கிலை ஒருவரு மீடே! பற்பல தெய்வம் படைத்தன ரெனினும் பண்புடை தாய்முதற் தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய் நல்லறப் பேற்றினால் பெற்றேன்! வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின் விழைவது அம்மையே…
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 3
(முன் இதழ்த் தொடர்ச்சி) – இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது….
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5
(முன்னிதழ்த் தொடர்ச்சி) போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…
தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை
தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான் அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர் வேறு எங்கும் சொந்த வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…
