பிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா.
“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…
தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 4
கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். 1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர் இப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில் குடிசையில் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர். குழந்தைகள் எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது. பல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு பெற முடியாது இருந்தது. 2002 இல் மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் சொந்த இடம் வாங்கப்பட்டுச் சிறுகசிறுகக் கட்டடங்கள்…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 5
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) தமிழுக்கு ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்கிற முறையில் இவர் எழுதியுள்ளதை அவரது வழக்கமான கவன ஈர்ப்பு உத்தி என்பதாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் ஆர்.எசு.எசு மனநிலை இதிலும் வெளிப்படுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது. மொழிவாரி மாநிலம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மாறாக, இந்தியாவை எழுபதுக்கும் மேற்பட்ட சிறு நிருவாக அலகுகளாகப் பிரித்து ஆள வேண்டும் என்பது…
அச்சம்
கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால் உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால் உயிரும் நிலைக்குமா ! அச்சம் உள்ள நிலையினிலே அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை மகிழ்ச்சி தோன்றுமா ! அச்சம் பெற்ற மூளையிலே அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின் கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) சாமரபுசுபம் – கமுகு சாரணம் – அம்மையார் கூந்தல் சிகிச்சை – பண்டுவம் சிகை – முடி, மயிர் சிங்கி – மான் கொம்பு சித்தப்பிரமை – மனமயக்கம், பித்தியம் சிந்தூரம் – செந்தூளத் தாது சிலேபி – தேன்குழல், தேன்முறுக்கு சிவலிங்கம் – …
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 2
– இலக்குவனார் திருவள்ளுவன் (முன் இதழ்த் தொடர்ச்சி) பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள் மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும் “சில்லறை: என்றும் “உருப்படி” என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம் என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம் போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும் இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர். தமிழின் செம்மொழித் தகுதிகளைத் திறம்படவிளக்கியவர் இவர். “தமிழரிடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயார்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும்; வடமொழியினின்றுமே…
தமிழைப் போற்ற வாருங்கள்!
– இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…
தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!
இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும் தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர். அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும் பிற மொழி பேசுவோர் தம்…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட் – உருப்பருப்பு, படகரு அங்குட்டம் – பெருவிரலளவு அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம் அண்டவாதம் – விரையழற்சி அட்சதை – மங்கல அரிசி அத்தர் …
புதிது புதிதாய் சிந்தனை செய்
-கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை. புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின்…
