ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி
வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப் பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால் இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு மாண்பின் திறத்தையே…
எது சொந்தம்?
– இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும் புறாக்களாகி விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து அருந்தமிழன் தில்லிக்குத் தீனி ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட் டம்போல் பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித் தேடி ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை அவன்அ ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 3
– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது. – அழகு ஒரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து…
இலக்குவனார் புகழ் என்றும் வாழ்க!
– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர் தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்! தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச் சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்! மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!
ஈழ நேயமா? தேர்தல் நேயமா? – இதழுரை
மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தத்தம் உயிர்களை இழந்தவர்களைப் போற்றும் வாரம் இது. நாமும் ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கான வீர வணக்கத்தைச் செலுத்துவோம்! அதே நேரம், இத்தகைய நாள் வந்ததன்…
மாவீரர் உரைகளின் மணிகள் சில!
தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது. “எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 2
– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான். – தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai) தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா? என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். – யான்சன் விக்டர்(Johnson Victor) தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும். – சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR) தனக்கென்று ஒரு வரிவடிவு…
எது சொந்தம்? இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6 காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே கண்;விழித்தேன் உன்மனத்தில் இன்றே! என்னைப் பேதலிக்க வைக்கின்றாய்! என்ஆ சையில் பெருநெருப்பைக் கொட்டுகிறாய்! என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே! அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே! ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய்! என்சொந்தம் நீஎன்றேன் தவறா? கேட்டான். 7 ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம்! ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! எழுச்சிதரும் புறப்பாடல்…
அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி? 1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக! 4. கடைசி நாள் : 31.12.2013. 5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…
தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம் கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்! ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்! விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்! தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் !
தேடுகிறேன் . . . !
ஓடோடி உழைத்தமகன் வாடி மண்ணில் உட்கார்ந்தே தேடுகிறேன் உள்ளத்தால் எண்ணி ஆடிப் பெருங்காற்றில் அடிமரமே வீழ்ந்துவிட்டால் கூடி நிழலிலமரக் கூடுமோ ? வௌவால் மாந்தர்கள் வாழும்தமிழ் மண்ணில் வாய்மை மேட்டிலொரு தூய்மையாளன் தோன்றினான் ! காய்மை மனமில்லாக் காரணத்தால் கரைசேரவில்லை தாய்மை மனமிருந்ததாலே தமிழ்க்கரைகண்டார் !
