தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 3

 தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று சேர்ந்தன. தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு 1997 இல் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை அதன் சுற்றுபகுதியில் இயங்கிய தமிழ்வழிப் பள்ளிகள், பள்ளிகளைத் தொடங்க இருந்தவர்களும்…

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

– திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!…

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 4

தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை??? சிவனேசுவரி தியாகராசன் (Shivaneswari Thiyagarajan) இன்று உன் எழுத்தை மாற்று என்பர்; நாளை உன் மொழியை மாற்று என்பர்; நாளை…

விசயகாந்திற்கு வாழ்த்துகள்!

  விசயகாந்து எடுத்த முயற்சி  பாராட்டிற்குரியதே! ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது? காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா? தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா? காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர்? காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால் அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும். இனியாவது அவர் திருந்தட்டும்! தமிழ், தமிழர் நலன்…

மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!

  இதழுரை   முதுமையில் இறந்திருந்தாலும்  நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும்  ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது.   எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற  சிறைவாழ்க்கைதானே காரணம்?  சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால்  பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள்  எனலாம்….

மாவீரர் உரைகளின் மணிகள் சில! 3

  இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன? தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா? தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப் பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது. தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை…

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…

சடுகுடு – வெற்றிச்செழியன்

  சடுகுடு ஆட்டம் ஆடு – நம்                 உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம்                 மண்ணை மீட்டிடப் பாடு – 2    (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ                 சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம்                 பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2        (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ                 எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன்                 தோல்வியை அவரிடம்…

எந்நாளோ? – இறைக்குருவனார்

  கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ? கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ? திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல்  எந்நாளோ? அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ? நாடும்இனமும் நன்மொழியும்  நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ? உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…

அயல்மொழி எதற்கடா தமிழா?

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்   கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு  மொழியா?   பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…

வழி சொல்வீர்! – தங்கப்பா

  உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்   உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!   குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ?   தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை   தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.   உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே!   பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்   பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;   வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே!   நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்   நீறாகிப்…

பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை….. -முனைவர். ப. பானுமதி

கேவலம் மரணத்திடம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப் பரிட்சித்துப் பார்.     இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்  தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது, “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்! . . .              …