மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 30

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 29 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 “எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோடமுன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!” உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 54

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி   ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துகளை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 29

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  11 தொடர்ச்சி   மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி   முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  11 தொடர்ச்சி பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள். “வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 52

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 51. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 அங்கங்கே வேலைகளுக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். பணியாளர் தேர்வாணையத்துக்கு  விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை. மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி   திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லாரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று ‘திலகவதியார் சரித்திரம்’…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 49

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 48. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 தொடர்ச்சி பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார். வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 10  உடல்குழைய என்பெலாம் நெக்குருகவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்றஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவேஓர் உறவும் உன்னியுன்னிப்படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற…      — தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம்  6 தொடர்ச்சி   “தரளம் மிடைந்து – ஒளிதவழக் குடைந்து – இருபவளம் பதித்த இதழ்முகிலைப் பிடித்துச் சிறுநெளியைக் கடைந்து – இருசெவியில் திரிந்த குழல்அமுதம் கடைந்து – சுவைஅளவிற் கலந்து – மதன்நுகரப் படைத்த எழில்“ படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக்…

கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…