முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ

முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விலையுயர்ந்த மரங்கள் சேதம்   தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் கருகின.   முருகமலை வனப்பகுதியில் உணவகங்கள், அடுமனைகள்(பேக்கரிகள்), ஓய்வுமனைகள் ஆகியவற்றுக்கு அடுப்பு எரிப்பதற்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டியபின்னர் வெட்டிய மரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து வரும் கோரைப்புற்களின் மீது தீயை வைத்து விடுகின்றனர். இவ்வாறு தீ வைப்பதாலும் தற்பொழுது கோடை வெயில் உக்கிரமாக இருப்பதாலும் இந்தத் தீ…

தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…

நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி) விற்பனை மந்தம்

நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி) விற்பனை மந்தம் தேவதானப்பட்டி பகுதியில் கோடைக் காலம் தொடங்கியவுடன் கம்பங்கூழ், இளநீர், மோர், நீர்ப்பூசுணை, நுங்கு போன்றவற்றை வாங்கிக் கோடைக்காலத்தைத் தாங்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் நிகழ்பதிவி(WhatsApp) மூலம் நீர்ப்பூசுணையில் கலப்படம் என்று வந்த செய்தியை அடுத்து இப்பொழுது நீர்ப்பூசுணை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். நீர்ப்பூசுணையில் எரித்ரோசின் பி எனும் சிவப்பு நிறமியை ஊசி வழியாக உட்செலுத்துவதன் மூலம் அதன் நிறம் மாறுகிறது. இதனை உண்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. என்பதுதான் அந்தத் தகவல். வணிகர்கள் சிலர், நீர்ப்பூசுணைப்…

நாவி சந்திப்பிழை திருத்தி

வணக்கம். நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.   வாணி – http://vaani.neechalkaran.com/ பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx

கருகும் தென்னை மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் கருகும் தென்னை மரங்கள்  தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கெங்குவார்பட்டி   முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் கருகின. இதனால் உழவர்கள் தென்னை மரத்தை வெட்டி விட்டு அதனை வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் ஆறு, ஏரிகள், கிணறுகள்…

மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.      சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப்…

சங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு

சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு   தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.   முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் தண்ணீரை மின்பொறி மூலம் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் தண்ணீரை நீரூர்திகள், உழுவைகளில் நிரப்பி உணவகங்கள், வீடுகள். விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.   அரசு உழவர்களுக்கு விலையின்றி…

முடித்த பணியைப் புதுப்பணியாகக் காட்டும் பொதுப்பணித்துறையின் ஊழல்!

தேவதானப்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!     தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை உயர்த்துகின்ற பணியினை செய்து வருகிறது. இதே போல செங்குளத்துப்பட்டி கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பணி நடைபெற்றது. அப்போது…

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் கொட்டிவிட்டு அதன்மேல் செம்மண்ணை வைத்து வேலையை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் தரைப்பாலங்களில் சுமையூர்திகள், கனவகை இயந்திரங்கள் செல்லும் போது பாலங்கள் உடைந்து விடுகின்றன….

தேவதானப்பட்டி : வறண்ட மேய்ச்சல் நிலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே வறண்ட மேய்ச்சல் நிலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போனதால் கால்நடைகள் அடிமாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி முதலான சிற்றூர்களில் கால்நடைகளும், வேளாண்மையும் முதன்மைத் தொழிலாக உள்ளது. தற்பொழுது கோடைக் காலத்திற்கு முன்பே இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு நிலம் இல்லாததால் காய்ந்த சருகுகளையும், காய்ந்த புற்களையும் கால்நடைகள் உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்…

தேவதானப்பட்டியில் இயந்திர அறுவடை

தேவதானப்பட்டிப் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை   தேவதானப்பட்டிப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கியது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ..கல்லுப்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம், மேல்பகுதியில் பல காணி பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்றது.   கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால்; இப்பகுதியில் நிலங்கள் அனைத்தும் தரிசாக இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. வற்றி இருந்த கிணறுகளும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் நெல் பயிரிட்டனர். நெல்…

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் எங்கே?

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலர் அலுவலகத்தைத் தேடி அலையும் பொதுமக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முதலக்கம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட வைகை புதூர், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி முதலான ஊர்களுக்கு ஊர் நிருவாக அலுவலகம் முதலக்கம்பட்டியில் உள்ளது.  முதலக்கம்பட்டியில் ஊ.நி.அ.திகாரி அலுவலகத்திற்குக் கட்டடம் இ;ல்லை. இதனால் ஊ.நி.அ. அலுவலகக் கட்டடம் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சமுதாயக்கட்டடத்தில் இயங்கியது. அதன்பின்னர் அக்கட்டடம் புறநூலகமாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஊர் வறுமை ஒழிப்புச் சங்கத்திற்குச்…