தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு
தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…
தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்
தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும் – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன. …
கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…
எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’
எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4, கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித…
ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்துங்கள், இலக்குவனார் திருவள்ளுவன், காணுரை, தேசத்தின் குரல்
தமிழ்த்தேவை மதிப்பை உயர்த்தினால்தான் தமிழ் வாழும், தமிழரும் வாழ்வர் என்பது குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் தேசத்தின் குரல் என்னும் நம் ஒளியலை அலைத்தளத்தில் ஆற்றிய காணுரை – தாய்மொழியைப் புறக்கணிப்பதால் தோற்கும் தமிழர்கள் –
