கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு

வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது. இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள”…