திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)   4  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 ) மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு. நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   3 அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245)   “அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர். காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 2, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  2   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)  ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல் தன்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 (குறள்நெறி)  பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே! துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே. தீச் செயல்  புரிந்து அழிவைத் தேடாதே! தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே! உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே, கேடு இல்லாதிருக்கத்  தீயன செய்யாதே! மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக! முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து! எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக! உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!   (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 (குறள்நெறி)  சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்! பயனில பேசிப் பதடி ஆகாதே!  நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு! பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே! மறந்தும் பயனற்ற சொல்லாதே! பயனுடையன சொல்லுக! தீய செய்யத்  தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக! தீயினும் தீதான தீயன செய்யாதே! தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே! பிறர்க்குக்  கேடு  செய்யாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்   [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220]

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 (குறள்நெறி)  பிறர் குறையை நீ கூறி,  உன் குறையை உலகம் கூறச் செய்யாதே! இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே! நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு! அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே! அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே! புறங்கூறி வாழாதே!   பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்! எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்! தீய செய்தலினும்  தீதான  பயனில சொல்லாதே! நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க :…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 (குறள்நெறி) பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே! உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே! பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!   அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே! பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே! செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே! (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்! அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே! முன்னால் இழித்துச்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 (குறள்நெறி)  பொறாமையால் அல்லவை செய்யாதே! (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு! சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு! செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்! நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே! பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும். அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே! (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே! உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு! பிறர் பொருள்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 (குறள்நெறி)  நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!. பொறுத்தவரைப் பொன்போல் போற்று! ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு! பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே! செருக்கினை வெல்ல பொறு! துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு! தீச்சொல் பொறு! அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்! இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு! அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!   (தொடரும்)இலக்குவனார்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி)  நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!   (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!   பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 (குறள்நெறி)  (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே! (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே! (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே! ஒழுக்கத்தால் மேன்மையுறு! ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே! (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு! (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு! தவறியும் இழிந்தன பேசாதே! உலகத்தாரோடு இணங்கி வாழ்! பிறர் மனைவியை விரும்பாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140 (குறள்நெறி)  (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி! (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு! நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே! (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே! நாவினால் பிறரைச் சுடாதே! (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்! நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி! ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்! ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது! ஒழுக்கம் தவறாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]