திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 3/9 – பி.என்.(இ)டயசு

[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – 3/9     இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை         தானேயுஞ் சாலுங் கரி                                                     (குறள்.1060) நாமக்கல்லார், பாவாணர், பேராசிரியர்  மோகனராசு மூவர் உரைகளை அலசுவோம்      ‘யாரும் தம்மிடம் வந்து பிச்சை கேட்பவனைக் கோபித்து வெருட்டி விடக்கூடாது அப்படிச் செய்தால் என்ன துன்பம் தமக்கு வந்துவிடும் என்பதை உணர்த்த அந்தப் பிச்சைக்காரன் படுகிற துன்பங்களே போதுமான சாட்சியம்.’ ( நாமக்கல் கவிஞர்)           ‘இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாதவிடத்து, இரந்தவன்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 (குறள்நெறி)  நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே! நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே! (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்! சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!  நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்! அடக்கத்தால் உயர்வு கொள்! அடங்காது சிறுமை கொள்ளாதே! அடக்கத்தைக் காத்திடுக. நல்வழியிலான அடக்கம்  கொள்! மலையிலும் உயர்வான அடக்கம்  கொண்டு வாழ்! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 – பி.என்.(இ)டயசு

[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 ஆனால், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்          பெய்யெனப் பெய்யும் மழை                                           (குறள்.55) என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 (குறள்நெறி) துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே! கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக!  நன்றி மறக்காதே! நன்றல்லதை அன்றே மற! பிறர் செய்யும் துன்பத்தை (அவர் முன்பு செய்த நன்மையை நினைத்து)  மறந்து போ! எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே! நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டு! நடுவுநிலை உணர்வுடன் செல்வம் ஈட்டு! நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி!  விட்டுச் செல்லும் பெயர் மூலம் தக்கவன் எனக் காட்டு! நடுவுநிலை தவறாத நெஞ்சத்தை…

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்   [ Dr.G.John Samuel,Founder Director and SecretaryINSTITUTE OF ASIAN STUDIES] சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரி, சென்னை – 600 119 மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834 இணையத்தளம்:  www.instituteofasianstudies.com    பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம், மொரிசியசு   முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. தலைவர், பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம் சென்னை

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 (குறள்நெறி) (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு! எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு! இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!  (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!  (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும்  உதவி செய்!  உற்றநேரத்தில் உதவு!   பயன்கருதாமல் உதவி செய்! (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!   உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு! தூயவர் உறவை மறக்காதே!…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்! 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு! 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே! 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே! 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே! 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு! 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு! 98. அனைவரிடமும் இன்சொல் கூறித்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 81.அன்பில்லாதவருடன் வாழாதே! 82.புறத்துறுப்புகளால் பயன் வேண்டுமெனில், உள்ளுறுப்பாம் அன்பு கொள்! 83. அன்பில்லாமல் உயிரிருந்தும் பிணமாகாதே! 84.விருந்தினரைப் போற்றி இல்வாழ்க்கை நடத்து! 85. சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க. 86. விருந்தோம்ப இயலாது வறுமையாளனாகாதே! 87. விருந்தினரைப் போற்றி வருந்தாமல் வாழ்! 88. வீட்டில் திருமகள் வாழ, விருந்தோம்பு! 89. விருந்தினர் உண்டபின் உண்! 90. தேவையெனில், விருந்தினர்க்கு விதையையும் உண்பி!   (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   71. மக்கள் அறிவுடைமை நம்மினும் மாநிலத்தவர்க்கு இனிது என உணர்! 72. மகனையும் மகளையும் பிறர் புகழுறுமாறு வளர்! 73. “பெற்றோர் செய்த தவம் யாதோ” எனச் சொல்லுமாறு வாழ்! 74. அன்பினை அடைக்கும் தாழ் இல்லை என அறி! 75. “எல்லாம் எனக்கே” என்று சொல்லாது பிறர்க்குத் தா! 76. பெற்றோர் அன்பால் பிறந்ததை எண்ணி அன்பு கொண்டு வாழ்! 77. அன்பினால் பழகும் விருப்பத்தையும் சிறந்த நட்பையும்…

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 – பேரா. வெ.அரங்கராசன்

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 முன்னுரை திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். திருவள்ளுவர் வழித்தோன்றல்கள் திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை! புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்! இல்லறப் பெருமையே பொலிவு! நன்மக்களே அழகு! என உணர்! நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி! எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு! நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி! நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை! மக்களைத்…