இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்

தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.   தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர்.   மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….

கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு

தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…

செயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்

dp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில்     தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன.  இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊராட்சிமன்றத் தீர்மானம்

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க…

திருக்குறள் நாள்காட்டி வெளியீட்டு விழா – ஒளிப்படங்கள்

திருக்குறள் தென்றல் ஓமன் தங்கமணியின் திருக்குறள் நாள்காட்டி வெளியிடல், விருதுகள் வழங்கல் விழாவின் ஒளிப்படங்கள். பெரிதாகக் காணச் சொடுக்கவும்.

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல்,…

இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்

இதழியலாளர் பாரதி  ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் – அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் ..                  இதழாளர் மாலன்                                                                                                                இதழாளர் திருப்பூர் கிருட்டிணன்                   …