அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது. கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப்…

14ஆவது தமிழ்இணைய மாநாடு, சிங்கப்பூர்: சில நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்

வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த 14 ஆவது தமிழ்இணைய மாநாட்டின் தொடக்கவிழா, இரண்டாம் நாள் விருந்து,  நிறைவு விழா, மூன்று நாள்களிலும் நடைபெற்ற உரைகள் சிலவற்றின் நிகழ்வுப் படங்கள். [படங்களுக்குரியவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் பின்னர் படங்களுடன் பெயர்களை இணைக்கலாம்.] படங்கள் – அகரமுதல & ஓம்தொலைக்காட்சி

இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்

  சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.   இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் பூவையர் பூங்கா நிகழ்ச்சி – சுரேசமீ

 மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது.  இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!   ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு,…

64 கலைகள்

இசைக்கலை ஆடற் கலை சிற்பக்கலை சித்திரக்கலை கட்டடக்கலை கவிதைக்கலை நாடகக்கலை இசைக்கருவிகள் இசைக்கும் கலை நீரலை இசைக்கலை (சலதரங்கம்) பன்மொழித்திறமை பல நூல்களைக் கற்றுணர்தல் கவி நயம் விளக்கல் கவிநடையில் பேசுதல் கவிதை வினா விடை கவிதையை முழுமையாக்கல் ஒப்புவித்தல் அழகுறப் பேசுதல் பல்சொற்பொருள் திறன் திறனாய்வுக் கலை குண இயல்புகளை அறிதல் ஒப்பனைக் கலை வண்ணப்பூச்சுக்கலை திலகமிடும் கலை கூந்தல் முடிக்கும் கலை ஆடை அணியும் கலை நகை அணியும் கலை தோட்டம் அமைத்தல் மலரால் அழகுபடுத்தல் கோலமிடுதல் உருவங்களைத் தோற்றுவித்தல் பொம்மைகள்…

சண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே   இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார். – தமிழ்க்கடல் மறைமலையடிகள்

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)  

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!  

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…

பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…