தந்தை செல்வா நினைவுப் பேருரைகள், இலண்டன்
சித்திரை 15, 2048 வெள்ளி ஏப்பிரல் 28, 2017 மாலை 4.00 – இரவு 9.00 தமிழ்த்தேசிய அமைப்பு பிரித்தானியக் கிளை
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு: பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார். “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…
ஓவியக்கலை – விபுலானந்த அடிகள்
ஓவியக்கலை ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான…
வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்
வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்
ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம் ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை. இவ்வாறு நம்மிடையே குறை வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் சித்திரை 09 / ஏப்பிரல் 22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது. துபாய் அல்ராசு பெருந்தொடரியகம் (Metro station) எதிரில் அமைந்துள்ள அல் அப்ரா பண்டுவ மனையில்(clinic) இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம் தொடர்பான அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. பொது மருத்துவத்தில் பட்டறிவு வாய்ந்த மருத்துவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த பல்மருத்துவர் நசிமா தலைமையிலான குழுவினரும் …
இயித்தாவில் (Jeddah) இசுலாமியச் சிறப்புத் தமிழ்மாநாடு
சவூதி அரேபியா இயித்தாவில் (Jeddah) சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14 வெள்ளிக்கிழமை அன்று இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில் சியாகி , கல்வியாளர் முசாகி இபன் இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி, உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன….
16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு
16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது. இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன
16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்
அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும். மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும். தமிழ்க்கணிமை ஆய்வுலகில் இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன. ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…
அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்
அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம் அய்மானில் இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை இதாயத்து: 050 51 96 433 கீழை ஏ அமீது யாசின்: 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரத்தத்தான…
தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!
தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம். அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…
18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்
மே 06 & மே 07, 2017 சித்திரை 23 & 24, 2048 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்
