வெருளி நோய்கள் 301 – 305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 301 – 305 00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன், வெருளி அறிவியல் தொகுதி 1/5
வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 291 – 295 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 296 – 300 296. இடை ஓய்வு வெருளி – Relaxationphobia இடை ஓய்வு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடை ஓய்வு வெருளி. Relaxation என்றால் பணிக்களைப்பால் பணிக்கு இடையே சற்று எடுக்கும் ஓய்வு. இதனை இளைப்பாறுதல் என்பதே சரி.ஆனால், இறைப்பாறுதல் என்பதைத் தூக்கம் என்னும் பொருளிலும் அதன் அடிப்படையில் மீளாத் தூக்கம் அடைதல் என்னும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர். எ.கா. மேரியம்மாள் கருத்தருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்தாள். எனவேதான் இடை ஓய்வு எனக் குறித்துள்ளேன்….
வெருளி நோய்கள் 291 – 295 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 286 – 290 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 291 – 295 291. இட வயின் வெருளி – Levophobia / Sinistrophobia இடப்பக்கம் உள்ள பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இட வயின் வெருளி இவர்களுக்கு இடப்பக்கக் கைப்பழக்கம் உள்ளவர்கள் மீதும் இடப்பக்க உறுப்புகள் மீதும் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் வரும். இடப்பக்கம் எதிர்நோக்கும் எதைக் கண்டாலும் அதனால் பெருந்தீங்கு விளையும் எனப் பேரச்சம் கொள்வர். இடப்பக்க அச்சத்தால் ஓட்டுதல், படித்தல் அல்லது பொருட்களை எட்டுதல் போன்ற எளிய பணிகள்…
தமிழ்க் காப்புக் கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம்-24.08.25
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (திருவள்ளுவர், திருக்கறள், ௪௱௰௫ – 415) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” – ஆளுமையர்கள் ‘செந்தமிழ்ச் செம்மல்’…
வெருளி நோய்கள் 286 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 286 – 290 286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி. சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்….
வெருளி நோய்கள் 281 – 285 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 276 – 280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 281 – 285 281. ஆற்றல் வெருளி – Energyphobia ஆற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆற்றல் வெருளி. ஆற்றல் வெருளி என்பது பொதுவாகத் தனித்துவமான வெருளி அல்ல. ஆனால், மின்வெருளி(Electrophobia), நெருப்பு வெருளி (Pyrophobia),கதிர்வீச்சு வெருளி(Radiophobia), அறுமரு(அறுவை மருத்துவ) வெருளி(Tomophobia) முதலிவற்றை உள்ளடக்கியது. 00 282. இ.ப.வட்டு வெருளி – DVDphobia இ.ப.வட்டு(DVD) குறித்த வரம்பற்ற பேரச்சம் இ.ப.வட்டு வெருளி. இலக்கமுறை பல்திற வட்டு(Digital Versatile Disc)என்பதன் சுருக்கமே இ.வ.ப.(DVD). இ.ப.வட்டின்…
காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் நளி இரு முந்நீர் ஏணி ஆக,வளி இடை வழங்கா வானம் சூடியமண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4) புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார். இப்பாடல் உழவின் சிறப்பையும் பல…
வெருளி நோய்கள் 276 – 280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 276 – 280 276. ஆழ்பு வெருளி-Bathophobia ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம். மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள்,…
வெருளி நோய்கள் 271 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 266 – 270 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 271 – 275 271. ஆலந்து வெருளி-Dutchphobia ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது. ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர். இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல். 00 272. ஆலன் வெருளி – Alanphobia புனைவுரு ஆலன்(Alan) குறித்த…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம் நூலாசிரியர். தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க நூலறி புலவர் நுவன்ற நெறியிது வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51) சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமற்கிருதக் கலப்பு கடூரம் பயக்கும் கன்னட மொழியில் வடெமாழிக்…
வெருளி நோய்கள் 266 – 270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 261 – 265 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 266 – 270 266. ஆர்லண்டோ வெருளி – Orlandophobia ஆர்லண்டோ(Orlando) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்லண்டோ வெருளி. ஆர்லண்டோ / ஓர்லாண்டோ ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரமாகும். இங்கே உலகப்புகழ்பெற்ற திசுனிஉலகம், உலகளாவிய(யுனிவெர்சல்) பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. ஆர்லண்டோ நகரம், பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவுமுறை முதலான பல குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர். 00 267. ஆர்வ வெருளி – Endiaferonphobia ஆர்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்வ…
வெருளி நோய்கள் 261 – 265 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 256 – 260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 261 – 265 261. ஆமை வெருளி – Chelonaphobia ஆமை, கடலாமை பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஆமை வெருளி. 00 262. ஆய்வக வெருளி – Laboratoryphobia ஆய்வகம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆய்வக வெருளி. வேதியப்பொருள்கள்(chemicals) மீதான ஒவ்வாமை, பேரச்சம் உள்ளவர்கள் ஆய்வகம் அல்லது ஆய்வுக்கூடம் பற்றிப் பேரச்சம் கொள்கின்றனர். ஆய்வின் பொழுது தவறு நேர்ந்து தீய வாயு வெளியேறும், தீப்பிடிக்கும், கண்ணாடிக் குடுவைகள் உடைய நேரிடும், இவற்றால் உடலுக்குத்…
