‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்
கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015 அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல் வெளீயீட்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய நூல் ஆய்வுரை: நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும்…
தமிழோடு வந்தோம்! தமிழோடு வாழ்வோம்! – வசந்தகுமார்
கொஞ்சு தமிழே… என் நாவில் தித்தித்தாய் தமிழாலே நமது புதிய வாழ்வை நாம் இன்று படைப்போம் உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில் மனிதனாய்த் திரிந்தது பரிணாமத்தில் அவர் நாகரிகமடைந்தது தமிழ்ச் சங்கக் காலத்தில் மனிதனை வடித்தது மொழியே அந்த மொழிகளில் மூத்தது தமிழே தமிழே முதலே அரைகுறை மொழிகளுக்கிடையே முழு இலக்கணம் கண்டது முதலே தமிழே உயர்வே காதல் வந்தால் நம் கன்னித் தமிழால் கவிதை பாடு கைகூடும் ஒரு நாள் உலகினுக்கே தமிழ் பழமை அந்தப் பழமையினும் தமிழ் இளமை மாற்றார் உணர்வார்…
சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? – யாழ்ப்பாவாணன்
தமிழ் சோறு போடுமா என்றே தமிழர் தான் பாடுகிறார் இன்றே (தமிழ்) வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே! நானும் தான் கேட்கிறேன் இங்கே! (தமிழ்) சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? நானும் தான் கேட்கிறேன் இங்கே! (தமிழ்) …
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு
புத்த வெறியல்ல… இரத்த வெறி! பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது. எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…
தமிழியல் ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி அறிஞர் ஆ.வேலு(ப்பிள்ளை)- இரவிக்குமார்
ஈழத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை (1936-2015): தமிழியல் ஆய்வுக்கு வழிகாட்டி ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை மறைந்த செய்தியை அறிந்தபோது கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவரது நினைவு எழாமல்போய்விட்டதே என வருத்தமுற்றேன். அவரை நேரில் அறிந்ததில்லை எனினும் அவரது எழுத்துகள் வழியே நெருக்கமாய் உணர்ந்திருக்கிறேன். தொல்லியல், கல்வெட்டியல், செவ்வியல் இலக்கியம் எனப் பல்வேறுதுறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராக இருந்தவர். தமிழும் பௌத்தமும் குறித்துபேராசிரியர்பீட்டர் சால்க்குடன் இணைந்து அவர் தொகுத்த இரண்டு தொகுதிகள் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தவை. தனது 28 ஆவது அகவைக்குள் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1960-1961 ஆம் ஆண்டுக்கான இலங்கை குடிமைப்பணித் தேர்வில் இலங்கை முழுதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக அவர் இருந்தார். அந்தப் பதவிக்குச் சென்றிருந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கப் பொறுப்புகளுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஆசிரியர் பணியிலேயே தொடரவேண்டும் என அவர் முடிவெடுத்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் கல்வெட்டியலைப் பயின்று…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3 தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….
இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்
10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில் வரும் தமிழ் வாழ்த்துப் பாடல். “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…
நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு
இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது. சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…
தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! – இலக்குவனார்திருவள்ளுவன்
தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும். நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 1/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது, மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், “தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன்” என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும், சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,…
சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார்
தொலைநோக்கு ஆன்றோர் இராமச்சந்திரனார் ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம். பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப்…
